For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இல்லை… மசூத் அசார் மட்டும்தான் இருக்கிறார்… பாக்., செம விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெய்ஷ்-இ-முகமது இல்லை, மசூத் அசார் இருக்கிறார்: பாக். விளக்கம்- வீடியோ

    இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு தங்கள் நாட்டில் செயல்படவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் தேதி தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்

    இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது, இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக கூறினார்.

    செத்துப்போன தீவிரவாதிகளை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா... கொசுவுடன் ஒப்பிட்டு வி.கே.சிங் கேள்வி செத்துப்போன தீவிரவாதிகளை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா... கொசுவுடன் ஒப்பிட்டு வி.கே.சிங் கேள்வி

    முஷாரப் பகீர்

    முஷாரப் பகீர்

    இதற்கிடையே முன்னாள் அதிபர் முஷாரப் அளித்த பேட்டியில் , கடந்த காலத்திலும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளை, இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அரசு பயன்படுத்தியதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்தியா வலியுறுத்தல்

    இந்தியா வலியுறுத்தல்

    இதனைத் தொடர்ந்து, புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்து, தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அதேநேரம், தாக்குதலுக்கான ஆதாரங்களையும் பாகிஸ்தான் வசம் இந்தியா கொடுத்துள்ளது.

    பாகிஸ்தான் மறுப்பு

    பாகிஸ்தான் மறுப்பு

    இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் பேசுகையில், தங்கள் நாட்டில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற இயக்கமே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேசமயம், மசூத் அசார் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.

    44 பேர் கைது

    44 பேர் கைது

    ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் மகன் மற்றும் சகோதரர் உட்பட 44 பேரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்தது. அதேநேரம், சில தீவிரவாத அமைப்புகளை தடை செய்துள்ளதாகவும் அந்நாடு கூறியது.

    பாகிஸ்தான் நாடகம்

    பாகிஸ்தான் நாடகம்

    பாகிஸ்தான் தொடர்ந்து கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பாகிஸ்தானில் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருகிறது. இதனால் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

    English summary
    Pakistan has said that the Jaish-e-Mohammed terrorist organization is not active in our country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X