For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

Google Oneindia Tamil News

Recommended Video

    பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மரணத்தில் வெளியான திடுக் தகவல்-வீடியோ

    ரியாத்: சர்ச்சைக்குரிய வகையில் துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்ற நிலையில் மீண்டும் திரும்பவே இல்லை. அவர் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு அறிவித்தது. ஆனால் இதை முதலில் மறுத்த சவுதி பின்னர் அவர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது. இச்சம்பவத்தால் துருக்கிக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டது.

    jamal khashoggi murder case: 5 Sentenced To Death For Killing Saudi Journalist Jamal Khashoggi

    ஜமால் கொலை செய்யப்பட்டு, அவரின் விரல் சவுதி மன்னருக்குப் பரிசாக அளிக்கப்பட்டதாகவும் , ஜமாலின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டுபின்னர் சவுதி தூதர் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் வீசப்பட்டதாக துருக்கி தெரிவித்தது.

    சவுதி பட்டத்து இளவரசர் சல்மானை கடுமையாக விமர்சித்ததற்காக பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதாகவும், அந்த கொலைக்கு பின்னணியில் சல்மான் இருந்ததாகவும் துருக்கி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இதை சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்தது.

    சீட்டுக்காக வாக்குவாதம் செய்த பாஜக எம்பி பிரக்யா தாகூர்... ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த பயணி சீட்டுக்காக வாக்குவாதம் செய்த பாஜக எம்பி பிரக்யா தாகூர்... ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த பயணி

    இந்நிலையில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று சவுதி அரேபியாவின் அரசு வக்கீல் இன்று தெரிவித்தார்.'

    சவுதி பட்டத்து இளவரசர் சல்மானுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. அதேநேரம் கொலையை நேரடியாக செய்ததாக ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    5 Sentenced To Death For Killing Saudi Journalist Jamal Khashoggi, Saudi Arabia's crown prince has not been charged.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X