For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானை ஆதரிக்கும் அந்த 58 நாடுகள் எதுங்க? கிடுக்குப் பிடி கேள்வியால் பாக். அமைச்சர் படுடென்ஷன்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிக்கும் 58 நாடுகள் பெயரை டிவி விவாதத்தில் நெறியாளர் கேட்டதால் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் அண்மையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தங்களை 58 நாடுகள் ஆதரிக்கின்றன என்றார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Jammu Kashmir issue: Pak Minister Shah Mahmood Qureshi Loses Cool in TV talk show

இப்பிரச்சனை குறித்து பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் நியூஸ் சேனலில் விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் ஷா மெகமூத் குரேசியிடம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நெறியாளர், பாகிஸ்தானை ஆதரிக்கும் அந்த 58 நாடுகள் பட்டியலை சொல்லுங்க என்று கிடுக்குப்பிடி கேள்வி கேட்டார்.

அவ்வளவுதான் தாமதம்.. செம கடுப்பாகிப் போன ஷா மெகமூத் குரோஷி, நீங்க யாரோ சொல்லித்தான் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறீங்க என சீறினார். ஆனாலும் விடாத நெறியாளர், பிரதமர் இம்ரான்கான்தான் தொடர்ந்து இப்படி சொல்லி வருகிறார். ட்விட்டர் பதிவிலும் போட்டு வருகிறாரே என மீண்டும் இடைமறிக்க உச்சகட்ட பதற்றத்துக்குப் போன ஷா மெகமூத் குரோசி, அந்த ட்விட்டர் பதிவை காட்டுங்க பார்க்கலாம் என்றார்..

நெறியாளரும் அந்த ட்விட் பதிவை ஷா மெகமூத் குரோசியிடம் காட்ட அவரது முகம் வெளிறிப் போனது. அத்துடன் நான் சொன்னது சரியான கருத்து..அதில் மாற்றமே இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

English summary
Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi Loses Cool on the Jammu Kashmir issue in TV talk show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X