For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு.. நண்பேன்டா பாணியில் மோடியை கண்டு டிரம்ப் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi in G-20 summit | ஜி-20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு- வீடியோ

    டோக்கியோ: ஜப்பானின் ஒசாகா நகரில், ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளிடையே ஜேஏஐ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே ஆகியோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு முன் அமெரிக்க அதிபரை டிரம்பை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார்.

    ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், 'ஜி-20' உச்சி மாநாடு நேற்றும் இன்றும் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றார்.

    நேற்று ஜப்பான் பிதமர் ஷின்சா அபேவை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புல்லட் ரயில் திட்டம், ஜப்பான் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வர்த்தகம் மற்றும் தூதரக ரீதியான உறவுகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

    சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா?.. தகவல் வெளியானது சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா?.. தகவல் வெளியானது

    டிரம்ப் வாழ்த்து

    டிரம்ப் வாழ்த்து

    இந்த சந்திப்புக்கு பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நேற்று ஜப்பானில் பங்கேற்றார். இன்று அதிகாலை ஒசாகா நகரில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார் அப்போது இருவரும் இருநாட்டு ராஜாங்க ரீதியான உறவுகள், வர்த்தகம், வரிகள், ஈரான் மற்றும் 5ஜி தொலை தொடர்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினார்கள். அப்போது அதிபர் டிரம்ப் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    மோடியுடன் பேச்சுவார்த்தை

    மோடியுடன் பேச்சுவார்த்தை

    இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னதாக கூறுகையில், நானும் பிரதமர் மோடியும் எங்கள் நாடுகளை விடவும் நெருங்கிய நண்பர்களாக ஆகிவிட்டோம். மோடி எனது சிறந்த நண்பர். நாங்கள் ராணுவம் வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று பேசப்போகிறேன் என கூறியிருந்தார்.

    அப்பாவிகள் கொலை

    அப்பாவிகள் கொலை

    முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் தலைவர்கள் மத்தியில் பேசுகையில், தீவிரவாதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி. இது அப்பாவி மக்களை கொல்வதுடன் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகிவிற்றிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார்.

    ஜேஏஐ கூட்டத்தில் மோடி

    ஜேஏஐ கூட்டத்தில் மோடி

    இதனிடையே பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய மூன்று நாட்டு தலைவர்களும் இணைந்து ஜேஏஐ (Japan-America-India) ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தோ-பசுபிக் பிராந்திய நலன்கள் குறித்தும், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நாடுகளுக்கு இடையேயான தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது தொடர்பாக பேசினார்கள். இந்த தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

    பிரதமர் மோடி விருப்பம்

    பிரதமர் மோடி விருப்பம்

    பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியாரையும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். பல்வேறு நாட்டு தலைவர்களை சந்திப்பதன் மூலம் அந்த நாடுகளுடன் ராஜாங்க ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் உறவை வலுப்படுத்த விரும்புகிறார் பிரதமர் மோடி.

    English summary
    Japan-America-India trilateral meeting in Osaka PM Modi meeting with Trump, Abe after PM Modi, Donald Trump Discuss Trade, Defence, 5G In Japan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X