For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல லட்சம் கிமீ வேகத்தில் சுற்றிய விண்கல்.. 2 ரோபோட்களை இறக்கி அசத்திய ஜப்பான்.. ஏன் தெரியுமா?

ஜப்பானை சேர்ந்த ஜக்சா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வேகமாக செல்லும் விண்கல் ஒன்றில் ரோவர் போல செயல்படும் ரோபோக்களை இறக்கி சாதனை செய்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜப்பானின் புதிய முயற்சி

    டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த ஜக்சா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வேகமாக செல்லும் விண்கல் ஒன்றில் ரோவர் போல செயல்படும் ரோபோக்களை இறக்கி சாதனை செய்து இருக்கிறார்கள்.

    அமெரிக்காவை சேர்ந்த நாசா செவ்வாய் கிரகத்தில் ரோவரை பல வருடங்களுக்கு முன்பே வெற்றிகரமாக இறக்கியது. ரோபோ போல இருக்கும் இந்த கியூரியாசிட்டி ரோவர் அங்கு பல வருடமாக சோதனை செய்து வருகிறது.

    இந்த நிலையில் ரோபோ போலவே செயல்படும், இரண்டு ரோவர்களை வேகமாக செல்லும் விண்கல் ஒன்றில் இறக்கி இருக்கிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள். ஜக்சா விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் இந்த சாதனையை செய்துள்ளனர்.

    விண்கல்லில் இறக்கினார்கள்

    விண்கல்லில் இறக்கினார்கள்

    பூமிக்கு மிக அருகில் தனியாக அதிவேகமாக சுற்றி வரும் ''ரைகு'' என்ற விண்கல்லில் இந்த இரண்டு ரோவர்களை இறக்கி இருக்கிறார்கள். ஹயபுஸா 2 என்ற ஸ்பேஸ்கிராப்ட் மூலம் அனுப்பப்பட்ட மினெர்வா 112 (MINERVA-II1) என்ற பெயர் கொண்ட இரண்டு ரோவர்களை விண்கல்லில் இறக்கி இருக்கிறார்கள். உலகில் முதல் முறை இப்படி ரோவர்கள் விண்கல் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.

    அருகில் சுற்றிக் கொண்டு இருந்தது

    அருகில் சுற்றிக் கொண்டு இருந்தது

    இந்த ஹயபுஸா 2 என்ற ஸ்பேஸ்கிராப்ட் மூலம் முதலில் ரைகு விண்கல்லுக்கு மிக அருகில் சென்று இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 கிமீ அருகே வரை சென்று வேகமாக சுற்றி இருக்கிறார்கள். அந்த ரைகு விண்கல்லை வேக வேகமாக இந்த ஹயபுஸா 2 சுற்றி இருக்கிறது. அதன்பின் குறிப்பிட்ட நேரம் கழித்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை அருகே சென்று இருக்கிறது இந்த ஹயபுஸா 2.

    எப்படி இறக்கினார்கள்

    எப்படி இறக்கினார்கள்

    பின் வரிசையாக ஒவ்வொரு ரோவராக இரண்டு ரோவரையும் தரையிறக்கினார்கள். முதலில் ஒரு ரோவர் மெதுவாக தரையிறங்கியது. அடுத்த ரோவர் அதை பின் தொடர்ந்தது. இன்னொரு ரோவர் அடுத்த மாத தொடக்கத்தில் அங்கு இறங்க உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு இந்த ரோவர்கள் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்யும்.

    ஏன் தெரியுமா

    ஏன் தெரியுமா

    இந்த ரைகு விண்கல்லுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று கேட்கலாம். இதில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் உலகம் எப்படி உருவானது, எப்படி உயிர்கள் உருவானது என்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என்று கூறுகிறார்கள். அதேபோல் வேற்றுலக உயிர்கள் குறித்த முக்கிய முடிவிற்கும் வரலாம் என்கிறார்கள்.

    English summary
    Japan lands two rovers in a Speed moving Asteroid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X