For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பானில் 9.3 நிலநடுக்கம்.. சுனாமியால் 90 அடி வரை உயரும் கடல் அலை.. ஆய்வில் பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் விரைவில் பெரிய அளவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று அந்த நாட்டின் ஆய்வுக் குழு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானில் கொரோனாவால் 11,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 281 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அந்த நாட்டுக்கு பேரிடியாக ஆய்வுக் குழு ஒன்று நிலநடுக்கம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Japan panel warns of mega earthquake and tsunami waves over 30 metere high

இதுகுறித்து டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியில், ஜப்பானின் வடக்குப் பகுதியில் சுனாமி ஏற்படுவது உறுதி. 9 ரிக்டர் அளவுகோலில் ஏற்படும் பட்சத்தில் 30 மீட்டர் உயரத்திற்கு சுனாமி ஏற்படும். பசிபிக் கடற்கரையையொட்டி இந்த பாதிப்பு உணரப்படும்.

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி டோக்கியோவுக்கு தென் பகுதியில் பசிபிக் கடலில் இருக்கும் அகாஸ்வாரா தீவுக்கு தெற்கே பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பெரிய அளவில் எங்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இனி ஜப்பான் டிரெஞ்ச் பகுதியில் நிலநடுக்கம் உருவாகும் என ஆய்வு குழு கணித்துள்ளது. ஷிசிமா டிரெஞ்ச் பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் சுனாமி ஏற்படலாம். அப்போது கடல் அலைகள் 90 அடிக்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 2011-ஆம் மார்ச் 11-இல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் 15 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். இந்த ஆய்வுக் குழுவின் கணிப்பினால் ஜப்பான் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

English summary
Japan panel warns of mega earthquake and tsunami waves over 30 metere high.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X