For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பான்காரன் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்குறான் நாம?... இந்திய ரயில்வேயை சீண்டிய நெட்டிசன்ஸ்

ரயில் புறப்படும் நேரத்தை விட 20 நொடி முன்பாகவே புறப்பட்ட காரணத்தால் ஜப்பான் ரயில் நிறுவனம் தன் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டோக்கியோ: ரயில் புறப்படும் நேரத்தை விட 20 நொடி முன்பாகவே புறப்பட்ட காரணத்தால் ஜப்பான் ரயில் நிறுவனம் தன் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது. இதற்கான மன்னிப்பு கடிதத்தை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது.

ஜப்பானின் இரண்டு முக்கிய பகுதிகளை இணைக்கும் அந்த புல்லட் ரயில் பயணிகளிடம் அறிவிக்கப்படாமல் 20 நொடி முன்னதாக புறப்பட்டது. இதனால யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் ஜப்பான் ரயில்வே துறை மன்னிப்பு கேட்டு இருக்கிறது.

ஆனால் இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் இதை பயன்படுத்த்தி இந்திய ரயில்வே துறையை கலாய்த்து வருகின்றனர்.

சீக்கிரம் புறப்பட்ட புல்லட் ரயில்

சீக்கிரம் புறப்பட்ட புல்லட் ரயில்

ஜப்பானில் பயன்பாட்டில் இருக்கும் புல்லட் ரயில்கள் அனைத்தும் சரியான நேரத்திற்கு இயக்கப்படும். ஒரு நொடி வித்தியாசம் இல்லாமல் புல்லட் ரயில் புறப்படுவதும், சென்றடைவதும் நடக்கும். ஆனால் நேற்று 'மினாமி' நகரத்தில் இருந்து டோக்கியோ செல்ல இருந்த புல்லட் ரயில் 20 நொடி முன்னதாகவே புறப்பட்டது. 9:44:40க்கு புறப்பட வேண்டிய ரயில் 9:44:20க்கு புறப்பட்டு இருக்கிறது. இதனால் எந்த பயணியும் பாதிக்கப்படவில்லை.

எதற்காக மன்னிப்பு

எதற்காக மன்னிப்பு

இந்த சம்பவத்தை அடுத்து ஜப்பான் ரயில்வே துறை மன்னிப்பு கேட்டு இருக்கிறது. தற்போது அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது. அதன்படி ''பொதுவாக சரியான நேரத்தில் ரயில் புறப்படும். 20 நொடி சீக்கிரம் புறப்பட்ட காரணத்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. யாராவது ரயிலில் ஓடிச்சென்று ஏற வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற தவறு இனி நடக்காது'' என்று மிகவும் பணிவாக தனது விளக்கத்தை அளித்து உள்ளது.

ஜப்பான் நல்ல ஜப்பான்

தற்போது ஜப்பானின் ரயில்வே நிர்வாகத்தை பாராட்டி பலரும் டிவிட்டரில் எழுதி வருகின்றனர். ரயில்வே துறைனா ஜப்பான் மாதிரி இருக்கணும் என்றும் கூறி வருகின்றனர். இவர் தனது டிவிட்டில் ''பேசாம ஜப்பான் ரயில்வே நிர்வாகம் உலகம் முழுக்க இருக்குற எல்லா ரயில்வேதுறையையும் பராமரிக்கலாம்'' என்று கூறியிருக்கிறார்.

இந்திய ரயில்வே துறை

அதேபோல் இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்ஸ் பலர் இந்திய ரயில்வே துறையை இந்த செய்தியை வைத்து கலாய்த்து வருகின்றனர். சிலர் இந்திய புல்லட் ரயிலும் இப்படி இருக்குமா என்று கேட்டுள்ளனர். இவர் ''கடைசியா இந்திய ரயில்வே துறை சரியான நேரத்துல ரயிலை எடுக்காததுக்கு எப்ப மன்னிப்பு கேட்டது'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Japan rail company seeks apology after a train left 20 seconds early. It surprised whole social media for the Japan's punctuality and politeness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X