For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன "ஐஸ்" வச்சாலும் இந்த ஐஸ்கிரீம் உருகவே உருகாது பாஸ்.. எப்பூடி!

ஜப்பான் நாட்டில் உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் அந்த நாட்டு விஞ்ஞானிகள்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானின் கனசாவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கடுமையான வெப்பத்தில் கூட உருகாத, தன்னுடைய நிலை மாறாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர்.

மகுடிக்கு மயங்காத பாம்பும் இல்லை, ஐஸ்கிரீம்க்கு மயங்காத மனிதர்களும் இல்லை. அந்த அளவிற்கு ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்குமே அலாதி பிரியம் தான். கப் ஐஸ், கோன் ஐஸ், கேக் ஐஸ் என்று பல வடிவங்களில் பல சுவைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம்களை வாங்கிய உடன் சுவைக்காவிடில் உருகி ஊற்றி சுவையும், வடிவமும் பாழாகிவிடும்.

ஆனால் ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளிரூட்டியில் இருந்து எடுத்தாலும் சுவைத்து முடிக்கும் வரை உருகாத, வடிவம் மாறாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர். ஸ்கூப்புகளில் இருந்து எடுக்கப்படும் ஐஸ்கிரீம்கள் பவுலில் போட்டவுடன் உருகிவிடும் என்று வேகவேகமாக ருசிப்பதற்கு இனி குட்பை சொல்லி விடலாம் என்பதே இதன் சிறப்பு

கவனத்தை ஈர்த்த ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம்களை குளிரூட்டும் நிலையை அதிகரித்து உருகும் நிலையை குறைக்கும் முயற்சியில் ஜப்பானின் கனசவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். இந்த ஐஸ்கிரீம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது.

3 மணி நேரம் உருகாத ஐஸ்கிரீம்

இந்த புதிய கண்டுபிடிப்பு ஐஸ்கிரீம் ரூம் டெம்பரேச்சரில் 3 மணி நேரம் வரை உருகாமல் இருக்கும் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் ஹேர்ட்ரையரில் வரும் வெப்பத்தை கொண்டு ஐஸ்கிரீம் மீது 5 நிமிடங்கள் காட்டிய போதும், அவை தன்னுடைய வடிவம் மாறாமல் உருகாமல் அப்படியே இருந்துள்ளது

ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

ஸ்ட்ராபெர்ரியில் இருந்து எடுக்கப்படும் பாலிபெனால் என்ற திரவத்தை ஐஸ்கிரீமில் புகுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. பாலிபெனாலுக்கு நீரை அடர்த்தியாக்கும் தன்மையும் எண்ணெயை பிரித்தடுக்கும் தன்மையும் உள்ளதாக கனசவா பல்ககைக்கழக பேராசிரியர் தோமிஹிசா ஓட்டா கூறியுள்ளார்.

சாப்பிட விரும்பும் மக்கள்

சாப்பிட விரும்பும் மக்கள்

பாலிபெனால் புகுத்தப்பட்ட ஐஸ்கிரீம்கள் நீண்ட நேரத்திற்கு உருகாமல் தன்னுடைய வடிவத்திலேயே இருக்கும். இந்த வகை ஐஸ்கிரீம்கள் சாக்லேட், வெணிலா மற்றும் ஸ்டாபெர்ரி உள்ளிட்ட சுவைகளில் கிடைக்கும் என்பதால் உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் இதை சாப்பிட முயற்சித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு எப்பப்பா வரும் இந்த ஐஸ்கிரீம்.. ??

English summary
Scientists in Japan have invented ice cream which does not melt before you have had time to finish it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X