For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள்னா ரொம்ப இஷ்டம்.. முதலில் உறவு.. பிறகு "அது".. அதன் பிறகு.. ரத்தம் உறைய வைக்கும் ஜப்பானியர்!

Google Oneindia Tamil News

டோக்கியோ: இதோ இந்த போட்டோவில் இருக்கும் சார் பெயர் தகாஹிரோ ஷிரைசி.. பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.. முதலில் அவர்களுடன் தொடர்பு கொள்வார்.. பிறகு கொலை செய்வார்.. பிறகு அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்து ஃபிரிட்ஜூக்குள் வைத்துவிடுவார்..!
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகருக்கு அருகில் சாமா என்ற இடம் உள்ளது.. இங்குதான் தகாஹிரோ ஷிரைசி வாழ்ந்து வந்தார்.. 30 வயதுதான் ஆகிறது.. அதற்குள் எல்லாவித பயங்கரத்திலும் இறங்கிவிட்டார்.

அதற்காக இவர் கையில் எடுத்த ஆயுதம் ட்விட்டர்.. வாழ்க்கையில் யாரெல்லாம் விரக்தியடைந்தவர்கள், அந்த விரக்தியால் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அவர்களுடன் பழகுவது இவருக்கு வழக்கம்.. அந்த ட்விட்டரில் சொந்த வாழ்வில் பாதிக்கப்பட்ட பெண்கள் புலம்பி எதையாவது பதிவிட்டால், அதுதான் ஷிரைசிக்கு க்ளூ.

 தற்கொலை

தற்கொலை

அவர்களுடன் நட்பாக பேசுவார்.. பிறகு "வாங்க நாம சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம்" என்று கூப்பிடுவார்.. பிறகு, தன்னுடைய வீட்டுக்கு வரவழைப்பார்.. பிறகு அவர்களை கொலை செய்து, அவர்களின் தலை மற்றும் உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து, ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துவிடுவார்.

ஃப்ரிட்ஜ்

ஃப்ரிட்ஜ்

இப்படி மொத்தம் 9 பேரை கொன்றுள்ளார்.. அந்த 9 பேரின் உடல்களும் அதே ஃப்ரிட்ஜில் இருக்கின்றன.. இவர்கள் எல்லாருமே 15 முதல் 26 வயதுடைய பெண்களாம்.. 2017-ல் ஒருத்தர், தன்னுடைய பாதிக்கப்பட்ட தங்கையின் ட்விட்டர் கணக்கை ஆய்வு செய்யும்போதுதான், "வாங்க நாம தற்கொலை செய்து கொள்ளலாம், உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா? என்கிட்ட வாங்க" என்ற அழைப்பை பார்த்து அதிர்ந்து போனார்.. உடனடியாக போலீசுக்கு அவர் தகவல் சொல்லவும், போலீசாரும் விரைந்து வந்து ஷிரைசி வீட்டை கண்டுபிடித்து சோதனை செய்தனர்.

கோர்ட்

கோர்ட்

அப்போதுதான் ஃப்ரிட்ஜை திறந்து பார்த்து அலறி விட்டனர்... இது சம்பந்தமான வழக்கு இவ்வளவு காலம் கோர்ட்டில் நடந்து வந்தது.. 9 கொலைகளை செய்ததையும் ஷிரைசி ஒப்புக் கொண்டார்.. ஆனாலும் வேறு ஒரு பிரச்சனை வாதத்தின்போது எழுந்தது.. 9 பேரை கொன்ற ஷிரைசிக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டால், ஷிரைசியின் வக்கீலோ, கொலை செய்யப்பட்டவர்களின் சம்மதத்துடன் தானே இவர் கொலை செய்து இருக்கிறார்? அதனால், இந்த தண்டனையை சற்று பரிசீலிக்க வேண்டும் என்றார்.

 தூக்கு

தூக்கு

ஆனால், நடுவில் குறுக்கிட்ட ஷிரைசியோ, "இல்லை, அவர்களின் சம்மதம் இல்லாமல்தான் கொலை செய்தேன்" என்றார். இதையடுத்து, ஷிரைசிக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.... இவரை "ட்விட்டர் கொலைகாரன்" என்று அங்கு அழைக்கிறார்கள்.. ஷிரைசிக்கு மரண தண்டனை தந்துவிட்டபோதிலும், இந்த அதிர்ச்சியில் இருந்து ஜப்பான்காரர்கள் இன்னும் மீளவேயில்லை.

English summary
Japan twitter killer Takahiro Shiraishi sentenced to death for nine murders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X