For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிதாக பிறந்த குரங்குக் குட்டிக்கு ‘சார்லோட்’ எனப் பெயர்... சர்ச்சையில் சிக்கிய ஜப்பான்

Google Oneindia Tamil News

டோக்கியோ: இங்கிலாந்து குட்டி இளவரசியின் பெயரை, உயிரியல் பூங்கா ஒன்றில் புதிதாக பிறந்த குரங்குக்குட்டிக்கு சூட்டியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது ஜப்பான்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் -கேட் தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு சார்லோட் எலிசபெத் டயானா எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், அக்குழந்தை சார்லோட் என்றே அழைக்கப் படும் என்றும் இங்கிலாந்து அரண்மனை அறிவித்தது.

இந்நிலையில், ஜப்பானின் ஒயிட்டா நகரில் உள்ள டகசகியாமா உயிரியல் பூங்காவில் நேற்று புதிதாக குரங்குக் குட்டி ஒன்று பிறந்தது. அந்தக் குரங்குக் குட்டிக்கு பூங்கா நிர்வாகம் சார்லோட் எனப் பெயரிட்டது.

இங்கிலாந்து குட்டி இளவரசியின் பெயரைக் குரங்குக் குட்டிக்கு வைத்ததால் சர்ச்சை உண்டானது. ஆனால், குரங்குக்குட்டிக்கு பெயர் வைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட போட்டியில் சார்லோட் என்ற பெயர் தேர்வு செய்யப் பட்டதாகவும், அதனேலேயே அப்பெயர் குரங்குக் குட்டிக்கு வைக்கப் பட்டதாகவும் பூங்கா நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ஆனபோதும், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதால், தற்போது இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

English summary
A Japanese zoo has apologized after being criticized for naming a baby monkey Charlotte, the name of the newborn British princess.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X