For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொல்பேச்சு கேட்காததால் காட்டில் விடப்பட்ட சிறுவன் 6 இரவுகள் கழித்து மீட்பு

By Siva
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் சொல்பேச்சு கேட்காததால் பெற்றோரால் காட்டில் விடப்பட்ட 7 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜப்பானை சேர்ந்தவர் யமடோ டனூகா(7). கடந்த சனிக்கிழமை அவர் தனது பெற்றோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சொல்பேச்சு கேட்காமல் சேட்டை செய்ததால் பெற்றோர் அவரை காட்டுப் பகுதியில் தனியாக விட்டுவிட்டு சென்றனர்.

Japanese boy left in forest rescued after six nights

கரடிகள் அதிகம் இருக்கும் அந்த காட்டில் தனியாக நடந்து சென்ற சிறுவன் ராணுவத்தினர் கட்டியிருந்த குடிசை ஒன்றில் தங்கினார். அந்த குடிசையிலேயே அவர் உணவு இன்றி பசியுடன் ஆறு இரவுகளை கழித்தார்.

அவர் காட்டிற்கு சென்ற நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இரவில் கடுங்குளிராக இருந்துள்ளது. சிறுவன் தண்ணீரை குடித்து உயிர் வாழ்ந்தார். இந்நிலையில் அந்த குடிசைக்கு சென்ற ராணுவத்தார் அங்கு தனியாக இருந்த சிறுவனை மீட்டு ஹகோடேட் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் சிறுவனின் தந்தை கூறுகையில்,

என் செயலால் என் மகன் கஷ்டப்பட்டுள்ளான். என் மகன் படிக்கும் பள்ளியில் உள்ளவர்கள், அவனை மீட்ட ராணுவத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் மகனை பார்த்த உடனேயே முதலில் மன்னிப்பு கேட்டேன். அவன் ஓகே என கூறினான் என்றார்.

English summary
Seven-year-old Japanese boy who was left in a forest by his parents as punishment, has been rescued after six nights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X