For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்லம், அழாம வெங்காயம் உரிக்கனும்.. சரியா... அதான் கண்ணீர் வராத வெங்காயம் வந்திருச்சுல்ல...!

Google Oneindia Tamil News

டோக்கியோ: உரித்தால் கண்களில் கண்ணீர் வரவைக்காத புதிய வெங்காயத்தினை ஜப்பான் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருப்பார்களோ, என்னவோ.

இந்த கஷ்டம் அடுத்த தலைமுறையினருக்கும் தொடர வேண்டாம் என்று நினைத்த ஜப்பானிய வேளாண்மை அறிவியல் துறையினர், உரித்தாலும், நறுக்கினாலும் அருகில் இருப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்காத நவீன ரக வெங்காயத்தை கண்டுபிடிப்பதில் தற்போது வெற்றியடைந்துள்ளனர்.

Japanese Company Makes Tear-Free Onion

வெங்காயத்தில் கத்தி படும் வேளையில் அது வெளியேற்றும் வேதிக்கலவை தான் இந்த கண்ணீருக்கான காரணம் என்பதை கண்டறிந்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், அந்த வேதிக்கலவை நீக்கப்பட்ட வெங்காய வித்துக்களை சமீபத்தில் உருவாக்கினர்.

அவற்றை நட்டு, வளர்த்து இந்த நவீன வகை வெங்காயங்களை விளைவித்து தற்போது சாதனை படைத்துள்ளனர்.

இதற்கான காப்புரிமையை பெற்றுள்ள ஒரு ஜப்பானிய நிறுவனம், இந்த வெங்காயம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வருமா என்பது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஆனா நம்மாளுங்க இதை விட ரொம்பப் பெரிய புத்திசாலிங்க.. மெஷினே இல்லாமல் வெங்காயத்தை அழாமல் உரிக்கும் வழியை ஏற்கனவே கண்டுபிடித்து பல காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.. அதாங்க, தண்ணீரில் நனைத்து விட்டு வெங்காயத்தை உரித்தால் கண்ணிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராதுங்க.

English summary
The Japanese company House Foods Group created a tear-free onion, and thanks to them crying when slicing onions in the kitchen might be a thing of the past, Japanese media announced on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X