For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ட்வீட்டை ரீட்வீட் செய்த 1000 பேருக்கு தலா ரூ.6.55 லட்சம் அளித்த தொழில் அதிபர்.. ஆச்சர்ய காரணம்

Google Oneindia Tamil News

டோக்கியோ: ட்வீட்டை ரீட்வீட் செய்த 1000 பேருக்கு தலா ரூ.6.55 லட்சம் அளித்திருக்கிறார் ஜப்பான் தொழில் அதிபர் யூசகு மேசவா. ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தான் ஆச்சர்யமானது.

ஜப்பானில் புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனங்களை நடத்தி வருபவர் யூசகு மேசவா. இவருக்கு சொந்தமானது பிரபல ஆன்லைன் நிறுவனமான சோஸோ இன்க்.

இந்த நிறுவனத்தை சாஃப்ட் பேங்க் குரூப் கார்ப்பரேஷனுக்கு விற்பனை செய்வதன் மூலம் 900 மில்லியன் டாலர் பணத்தை அதாவது இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 409 கோடியே 17லட்சத்தை பெற்றார்.

என்னம்மா.. இப்படி திங்கறீங்களேம்மா.. மூஞ்சில வேற எதைப் பூசிக்குவாங்க இவங்க..? என்னம்மா.. இப்படி திங்கறீங்களேம்மா.. மூஞ்சில வேற எதைப் பூசிக்குவாங்க இவங்க..?

ட்விட்டரில் மேசவா

ட்விட்டரில் மேசவா

இவர் தனது காதலியும் நடிகையுமான அயாம் கோரிகியை பிரிந்த பின்னர் தற்போது மீண்டும் தலைப்பு செய்தி ஆகியிருக்கிறார். ட்விட்டரில் மேசவாவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி உள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

இவர் வழக்கமானவர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான பல முயற்சிகளை செய்திருக்கிறார் யூசகு மேசவா. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளார். விரைவில் நிலாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ட்வீட்டை ரீட்விட்

ட்வீட்டை ரீட்விட்

பணம் மனிதர்களின் வாழ்வில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிவிப்பதற்காக ஜனவரி 1ம் தேதி தான் செய்த ட்வீட்டை ரீட்விட் செய்த 1000 பேரை உத்தேசமாக தேர்வு செய்திருக்கிறார் யூசகு மேசவா. அவர்களுக்கு மொத்தமாக 9000 டாலர் அளித்திருக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 64.09 கோடி கொடுத்துள்ளார். இதில் ஒவ்வொருவரின் கைக்கு மட்டும் 6.55 லட்சம் கொடுத்திருக்கிறார்.

பணத்தால் மகிழ்ச்சி

பணத்தால் மகிழ்ச்சி

சமூகத்தில் பணம் எந்த மாதிரியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை குறித்து சோதனை செய்து அறியவே இந்த பரிசினை அளித்ததாக சர்வ சாதாரணமாக சொல்கிறார் தொழில் அதிபர் யூசகு மேசவா.

English summary
Japanese fashion tycoon Yusaku Maezawa pledged to give $9,000 to 1,000 of his followers who retweeted one of his tweets. he says is a "social experiment" to see if the payment boosts their happiness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X