For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெரியும்! இது என்ன புதுசா இருக்கே! வெறும் அரை மணி நேரம் எப்படி?

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் 36 வயது இளைஞர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக தினந்தோறும் அரை மணி நேரம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலையில் குறைந்த அளவிலான சிற்றுண்டி, இல்லாவிட்டால் பழம் அல்லது காய்கறிகளின் சாலட், மதியம் குறைந்த அளவு சாதத்துடன் அதிக அளவிலான காய்கறிகள், கீரை வகைகள், இரவு நேரத்தில் கால் வயிறு நிரம்பும் அளவுக்கு உணவு அல்லது சிற்றுண்டி என்பதுதான் பெரியவர்கள் வகுத்து வைத்த நடைமுறையாகும்.

சபாஷ்..! தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உடனடியாக களத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடிசபாஷ்..! தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உடனடியாக களத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி

அது போல் ஒவ்வொரு மனிதருக்கும் 8 மணி நேரம் தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த தூக்கம் குறையும் போது நேரம் தவறி தூங்கும் போதும் அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கட்டாய தூக்கம்

கட்டாய தூக்கம்

அதிலும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்கள் தினந்தோறும் கட்டாயம் 8 மணி நேரம் தூக்கம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள். 8 மணி நேரம் தூக்கம் என்றால் நள்ளிரவு 1 மணி, 2 மணிக்கு தூங்கிவிட்டு அதன் பிறகு மறுநாள் காலை 9, 10 மணிக்கு எழுந்திருப்பது அல்ல. இரவு நேரத்துடன் தூங்கி அதிகாலையில் எழுதல் நல்ல பழக்கம் என்கிறார்கள்.

36 வயது இளைஞர்

36 வயது இளைஞர்

ஆனால் ஜப்பானில் ஒரு இளைஞர் ஒரு நாளைக்கு வெறும் அரைமணி நேரம் மட்டுமே தூங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயர் டைசூரி ஹோரி, 36 வயதாகிறது. இவர் குறைந்த நேரம் உறங்குவோர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்தச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு குறைந்த நேரத்தில் எப்படி உறங்குவது என்பது குறித்த பயிற்சியை இவர் அளிக்கிறார்.

16 மணி நேரம்

16 மணி நேரம்

இது போல் அரை மணி நேரம் மட்டுமே தூங்குவதால் அவருக்கு சோர்வு என்பதே ஏற்படுவதில்லையாம். இதுகுறித்து அவர் கூறுகையில் ஒரு நாளைக்கு ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்றால் அதற்கு 16 மணி நேரம் என்பது எதையும் சாதிக்க போதுமானதல்ல. இதனால் ஆராய்ச்சிகள் மூலம் எனது 8 மணி நேர தூக்கத்தை அரை மணி நேரமாக குறைத்துவிட்டேன். எனினும் உடல்ஆரோக்கியத்துடன் புத்துணர்வுடனும் இருப்பதை உணர்கிறேன்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

இதையடுத்து ஜப்பானை சேர்ந்த ஒரு ஊடகம் ஒன்று இவரின் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க அனுமதி கேட்டது. அதற்கு ஹோரி அந்த நிறுவனத்திற்கு 3 நாட்கள் அனுமதி கொடுத்தார். அரை மணி நேரம் மட்டுமே தூங்கி இவர் மற்ற நேரத்தை எப்படி கழிக்கிறார் என கண்காணித்தனர்.

ஜிம்மில் பயிற்சி

ஜிம்மில் பயிற்சி

முதல் நாளில் ஹோரி காலை 8 மணிக்கு எழுந்து ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்தார். பின்னர் படிப்பது, எழுதுவது, அதிகாலை 2 மணிக்கு தூங்கி அடுத்த 26 நிமிடங்களில் எழுந்து மீண்டும் ஜிம்மிற்கு செல்கிறார். அதிலும் அலாரம் எதுவும் அடிக்காமல் அவராகவே எழுந்துவிடுகிறார். பின்னர் சில நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு வருகிறார்.

இரவு நேரம் வீடியோ கேம்

இரவு நேரம் வீடியோ கேம்

இரவு நேரங்களில் வீடியோ கேம் ஆடுகிறார். பின்னர் மீண்டும் படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் நேரம் கழிப்பது என இருக்கிறார். இவர் சந்திக்கும் நண்பர்களும் குறைந்த அளவு தூங்கும் பழக்கம் கொண்டவர்களாகவே உள்ளார்கள். அவர் தூக்கம் வராமல் இருப்பதற்காக காஃபீன் எனும் மருந்தை எடுத்துக் கொள்கிறார். எனினும் இதை ஜப்பான் மக்கள் அதிர்ச்சியாகவே பார்க்கிறார்கள்.

English summary
Japanese man says that he has slept only for 30 minutes for 12 years. He gradually reduced his sleeping time from 8 hours to 30 minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X