For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுவும் கூட தாய்மைதானே!

Google Oneindia Tamil News

ஒக்கினாவா, ஜப்பான்: தாய்மை போற்றி வணங்கப் படக் கூடியது.. இதோ இதுவும் கூட தாய்மைதான். இந்த ஜப்பானியப் பெண்ணின் செயலைப் பார்த்தால் உங்களுக்கும் அப்படித்தான் சொல்லத் தோன்றும்.

ஜப்பானின் ஒக்கினாவா நகரில் தாக்கிய புயலின் போது எல்லோரும் எதை எதையோ காக்க ஓட ஒரு பெண்மணி மட்டும் பப்பாளி மரத்தை பிடித்து தொங்கி கொண்டிருந்திருக்கிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அல்ல, அந்த பப்பாளி மரத்தை காப்பாற்றிக் கொள்ள என்பது தான் இதில் விசித்திரம். வாருங்கள் என்ன நடந்தது என்று பாப்போம்.

Japanese woman tries to save Papaya tree from Typhoon

அந்த பெண்மணி தன் வீட்டு தோட்டத்தில் ஆசை ஆசையாக ஒரு பப்பாளி மரத்தை நட்டு இரண்டு வருடமாக அக்கறையாக வளர்த்து வந்திருக்கிறார். அன்று அவரது நகரை புயல் தாக்கியது. பலத்த காற்றுடன் கன மழை. தனது பப்பாளி மரத்திறகு ஆபத்து என்று அறிந்ததும் அவருக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. மரத்திடம் ஓடினார். அது விழந்து விடக் கூடாதே என்பது மட்டும்தான் அவருக்குத் தோன்றியிருக்கிறது.

வீசும் புயல் காற்றில் தன ஆசை பப்பாளி மரம் விழுந்து விடக்கூடாது என நினைத்து ஒரு துள்ளு துள்ளி அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். காற்றின் வேகம் கூட கூட தனக்கு என்ன ஆகுமோ என்று நினைக்காமல் ஐயோ என் ஆசை மரம் சரிந்து விழுந்துவிடக் கூடாதே என்று அதை இறுக்கப் பிடித்து கொண்டார்.

காற்றில் மரம் ஆட ஆட அப்பெண்ணின் பாசக் கூக்குரலோடு புயல் சத்தமும் சேர்ந்து ஒலிக்கும் வீடியோவை பாருங்கள். அந்தப் பெண் கையை அசைத்து உதவிக்கு கூப்பிடும் ஜப்பான் மொழி புரியாமல் இருந்தாலும் அப்பெண்மணியின் முகத்தில் தெரியும் அன்பு மொழி மனதை உருக்குகிறது.

இருக்கும் மரத்தை வெட்டும் உலகில் இப்படிப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கு. இதயத்தில் ஈரம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல் நம் மூதாதையர் வளர்த்த மரத்தையும் தாய் தந்தை வளர்த்த மரத்தையும் கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் சதக் சதக்கென வெட்டி போட்டு விட்டு எதை எதையோ உயரமாக கட்டிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பெண்மணியின் மரம் காக்கம் இந்த மனசும் கூட தாய்மைதான்!

- Inkpena சஹாயா

English summary
A Japanese woman tried to save Papaya tree from Typhoon and the video has gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X