For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் சகோதரர்களே.. இந்த வாளால் மனிதர்களை கொல்ல முடியும்.. மிரட்டல் விடுத்த பாக். கிரிக்கெட் வீரர்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாளை சுற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுவிட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.

காஷ்மீரில் பல பகுதிகளை அத்துமீறி ஆக்கிரமித்துள்ள சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியாவின் இந்த நடவடிக்கை பெரும் கிலியை கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் உலக நாடுகளை துணைக்கு அழைத்தது.

காலம் கலிகாலம் ஆகி போச்சுடா.. ரயிலில் விநாயகருக்கும் ரிசர்வேஷன்.. ஹாயாக அமர்ந்து வரும் கலர் கணேசா!காலம் கலிகாலம் ஆகி போச்சுடா.. ரயிலில் விநாயகருக்கும் ரிசர்வேஷன்.. ஹாயாக அமர்ந்து வரும் கலர் கணேசா!

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

ஆனால் எந்த நாடும் பாகிஸ்தான் பின்னால் செல்லாமல் இந்தியாவின் பக்கம் இருந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்றும் இரு நாடுகளும் அவமானப்பட்டதுதான் மிச்சம். எல்லா நாடுகளும் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறிவிட்டன.

போர் தொடுப்பது

போர் தொடுப்பது

தீவிரவாதத்தை விட்டுவிட்டு பாகிஸ்தான் வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என இந்தியா தெரிவித்துவிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த பாக். பிரதமர் இம்ரான் கானோ, பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்றும் இனி நேராக போர் தொடுப்பதுதான் என்றும் தெரிவித்தார்.

சகோதரர்கள்

சகோதரர்கள்

பாகிஸ்தானும் சீனாவும் போர் விமான ஒத்திகைகளில் கூட ஈடுபட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் காஷ்மீர் சகோதரர்களே கவலைப்படாதீங்க.

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

நாங்கள் உங்களுடன் உள்ளோம். கிரிக்கெட் மட்டையால் சிக்சர்களை விளாசும் போது இந்த வாளை கொண்டு கொல்ல முடியாதா என்ன? என கேட்டு வாளை நீட்டியபடி பேசியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக அவர் மிரட்டல் விடுக்கும் வகையிலான இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அமைதிக்கான கொடி

முன்னதாக ஜாவித் கூறுகையில் நான் அமைதியை நாடி எல்லைக்கு செல்வேன். இதற்காக அனைத்து உயரதிகாரிகளையும் விளையாட்டு வீரர்களையும் அழைப்பேன். அங்கு போய் அனைவரிடமும் அமைதி குறித்து வலியுறுத்துவேன். அமைதிக்கான கொடியுடன் செல்வேன் என்று கூறியிருந்தார்.

English summary
Former Cricketer Javed Miandad brandishin a sword and said can't i kill a man with a sword?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X