For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் பெரும் பணக்காரர் இனி பில்கேட்ஸ் இல்லை.. முதலிடத்தை பிடித்தது யார் தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி, அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ், உலக பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில், 90 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், 90.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ் ஏறத்தாழ முதலிடம் பிடித்தார்.

அமேசான் நிறுவனர்

அமேசான் நிறுவனர்

அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ் உலக அளவில் முதலிடத்தை பிடித்து விட்டாலும் அதை உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விற்பனையில் அமேசான் அபாரம்

விற்பனையில் அமேசான் அபாரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாத கடைசி வெள்ளி கிழமையில் ‛பிளாக் ப்ரைடே ' கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் அமேசான் நிறுவனம் பல சலுகைகளை அறிவித்தது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விற்பனையை அதிகரித்தது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

‛பிளாக் பிரைடே' விற்பனைக்கு பிறகு அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து ஜெப் பேசோஸ், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளார்.

அமேசான் முன்னிலை

அமேசான் முன்னிலை

ஒரு நாளில் நடந்த வியாபாராத்தின் மூலம் அவர் இந்த பெருமையை பெற்றுள்ளார். அமேசான் நிறுவனம்தான் இப்போது இந்தியாவில் முன்னணியில் உள்ள ஆன்லைன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amazon Chief Executive Jeff Bezos, unseated fellow tech billionaire and Microsoft co-founder Bill Gates as the richest person in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X