For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசிக் கொடுமை.. 8000 உணவு பாக்கெட்டுகளுக்கு.. 4 கி.மீ. தூரத்திற்கு நின்ற மக்களால் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

ஜோகன்னல்பெர்க்: கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    Hunger people in Johannesberg stand in a long queue

    உலகில் கொரோனாவால் 190 நாடுகளுக்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 33 லட்சத்திற்கு மேல் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 2.30 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்.

    இந்த வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் போராடி வருகின்றன. இதனால் ஆங்காங்கே பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    புட்டபர்த்தி போய் வந்தவருக்கு கொரோனா.. பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் முதல் தொற்று! புட்டபர்த்தி போய் வந்தவருக்கு கொரோனா.. பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் முதல் தொற்று!

    அபாயம்

    அபாயம்

    பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலையின்றி வருமானமுமின்றி மக்கள் அவதிப்படுகிறார்கள். அந்தந்த நாட்டு அரசுகள் உதவினாலும் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் கொரோனாவை விட பசிக்கு இறப்போர் நிலையே அதிகமாக ஏற்படும் அபாயம் உள்ளது.

    வருமானம்

    வருமானம்

    இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் 5,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 114 பேர் பலியாகிவிட்டனர். வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்ததை அடுத்து மார்ச் 27 ஆம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் வருமானமின்றி உணவுக்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    உணவு பொட்டலங்கள்

    உணவு பொட்டலங்கள்

    இந்த நிலையில் அந்த நாட்டில் ஜோகன்னஸ்பெர்கில் உள்ள சென்சூரியன் பகுதியில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வருவோருக்கு அரசு தரப்பிலும் சில தனியார் அமைப்புகளும் இணைந்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த தகவலை அடுத்து உணவு பொட்டலங்களை வாங்க அப்பகுதியில் ஏராளமானோர் வந்தனர்.

    வெளிநாட்டு பயணிகள்

    வெளிநாட்டு பயணிகள்

    இதையடுத்து அனைவரும் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அப்போது 4 கி.மீ. தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனர். 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 8000 உணவு பொட்டலங்கள் என கணக்கிடப்பட்டு கொண்டு வந்த நிலையில் இத்தனை நீண்ட வரிசையில் நின்றதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தன்னார்வல அமைப்புகள் திணறினர். இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்கா அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்கிறார்கள். மேலும் இவர்களில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டு பயணிகள் என கூறப்படுகிறது.

    English summary
    Thousands of Hunger people in Johannesberg stand in a long queue which was 2 miles long.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X