For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டுக்கு முன்பு குவிந்து கிடந்த பனியை அகற்றாத அமெரிக்க வெளியுறவு அமைச்சருக்கு அபராதம்

By Siva
Google Oneindia Tamil News

பாஸ்டன்: தனது வீட்டுக்கு முன்பு குவிந்திருந்த பனியை அகற்றாத அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகர் ஜான் கெர்ரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல பகுதிகளை ஜூனோ பனிப்புயல் தாக்கியது. இந்த பனிப்புயலால் சாலைகளில் பனி மண்டிக்கிடக்கிறது. பனிப்புயலால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

John Kerry Fined For Not Shoveling Snow Outside Home

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியின் வீடு பாஸ்டனில் உள்ளது. பீக்கன் ஹில் மேன்சன் எனப்படும் அந்த வீட்டின் முன்பு குவிந்து கிடந்த பனியை கெர்ரி அகற்றவில்லை. இதையடுத்து அந்த பகுதியை சோதனையிட்ட அதிகாரிகள் கெர்ரிக்கு ரூ.3,000 அபராதம் விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளனர்.

ஜான் கெர்ரி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் சவுதி அரேபியாவில் உள்ளார். இந்நிலையில் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து கெர்ரியின் செய்தித் தொடர்பாளர் க்ளென் ஜான்சன் கூறுகையில்,

அதிகாரிகள் விதித்த அபராதத் தொகையை கெர்ரி செலுத்துவார். தற்போது அவரது வீட்டுக்கு முன்பு இருந்த பனி அகற்றப்பட்டுள்ளது என்றார்.

English summary
Secretary of state John Kerry was fined Rs. 3,000 for not shoveling snow outside his Boston home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X