For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறிய குற்றங்களுக்கு தண்டனை ”புத்தகம் வாசித்தல்” - ஈரானில் நூதன தண்டனை வழங்கும் நீதிபதி!

Google Oneindia Tamil News

தெஹ்ரான்: ஈரானில் நீதிபதி ஒருவர் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களைத் தவிர்க்க நூதனமாக தீர்ப்புகளை வழங்கி ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.

ஈரான் நாட்டின் வட கிழக்கு பகுதியிலுள்ள கோன்பேட் இ காவுஸ் நகர நீதிமதி காசெம், "குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவதால், அவர்களது குடும்பத்துக்கும் அவர்களுக்கும், ஏற்படும் உளவியல் மாற்றத்திலிருந்து புத்தகம் படிப்பது தடுக்கும் என நம்புவதால் அவர்களுக்கு புத்தங்களை வாங்கி படிக்கும் வித்தியாசமான தண்டனை வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

குற்றவாளிகள் தமது சொந்த செலவில், ஐந்து புத்தகங்கள் வாங்கிப் படித்து அதைப் பற்றிய குறிப்பையும் எழுத வேண்டும் எனவும், இத்துடன் நபிகளின் பொன்மொழிகளில் அந்த புத்தகத்தின் கருத்துக்கு பொருந்தும் விதமான கருத்தை குறிப்பிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகள் தாம் படித்து முடித்த புத்தகங்களை அவர்கள் இப்பகுதி சிறைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

புத்தகத்தை தொடர்ந்து படித்துவரும் கைதிகள் தமக்குள் சண்டைகளில் ஈடுபடுவது குறைந்துள்ளதாகவும் இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

எனினும், இந்த தண்டனைகள், இளம்வயதில் முதல் குற்றத்தில் ஈடுபடுவோருக்குள் மாற்றம் ஏற்படுத்துமே தவிர எல்லோரையும் சரிசெய்ய உதவுமா என்பது கொஞ்சம் கடினமான ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
An Iranian court judge has come up with a novel idea to get offenders back on the right path without lengthy jail terms: he issued an order that allows for the replacement of jail sentences for “light” crimes, with reading.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X