For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க ஏகாதிபத்திய அரசுக்கு ஏஜெண்ட்டாக செயல்படும் கூகுள் சேர்மன்: ஜூலியன் அசாஞ்சே

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: அமெரிக்க ஏகாதிபத்திய அரசுக்கு கூகுள் நிறுவனத்தின் சேர்மன் எரிக் ஸ்மித் ஏஜெண்ட்டாக செயல்படுகிறார் என்று விக்கிலீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சாடியுள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய அசாஞ்சே, அந்நாடு பற்றி ஏராளமான ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். உலகம் முழுவதும் அசாஞ்சேவின் விக்கிலீக்ஸ் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Julian

இதனால் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். ரஷ்யாவில் சிறிது காலம் இருந்த பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் அவர் தஞ்சம் அடைந்தார்.

இப்படி உலகம் முழுவதையும் கவனிக்க வைத்த அசாஞ்சே தற்போது கூகுள் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அசாஞ்சே கூறியுள்ளதாவது:

உலகம் முழுவதும் கூகுள் நிறுவனம் ஏராளமான தரவுகளை சேகரித்து அமெரிக்காவுக்கு கொடுக்கிறது. கூகுள் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஸ்மித், அமெரிக்காவின் ஏஜெண்ட்டைப் போல, வெளியுறவுத் துறை அமைச்சர் போல செயல்படுகிறார்.

கூகுளின் இந்த செயல்பாடு உலகம் முழுவதும் அதிர்ச்சியும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பேராபத்தை இது ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அசாஞ்சே தெரிவித்தார்.

English summary
Julian Assange has launched an attack on Google - saying the search giant has turned 'big and bad', and characterizing its chairman Eric Schmidt as a Government agent trying to further U.S. 'imperialist' ambitions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X