For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதிக்கான நோபலை இணைந்து பெற்றனர் இந்தியாவின் கைலாஷ் - பாகிஸ்தானின் மலாலா!

By Siva
Google Oneindia Tamil News

Kailash Satyarthi, Malala Yousafzai Receive the Nobel Peace Prize Today
ஆஸ்லோ: டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் ஆகியோர் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று நடந்த விழாவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்கள்.

2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு குழந்தைகளின் உரிமைகளுக்காக பாடுபடும் டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று நடந்த விழாவில் அவர்கள் நோபல் பரிசை பெற்றுக் கொண்டனர்.

Kailash Satyarthi, Malala Yousafzai Receive the Nobel Peace Prize Today

மலாலா மற்றும் சத்யார்த்தி 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

முன்னதாக ஆஸ்லோவில் சத்யார்த்தி மற்றும் மலாலா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சத்யார்த்தி கூறுகையில், ஒரு குழந்தை ஆபத்தில் இருந்தாலும் அது மொத்த உலகமும் ஆபத்தில் இருப்பது போன்று தான் என்றார்.

Kailash Satyarthi, Malala Yousafzai Receive the Nobel Peace Prize Today

மலாலா கூறுகையில்,

விருது, பதக்கத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செல்ல நாங்கள் இங்கு வரவில்லை. உங்களின் உரிமைக்காக நீங்கள் தான் முன் வந்து குரல் கொடுக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெரிவிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்றார்.

பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா 2012ம் ஆண்டு தாலிபான்களால் தலையில் சுடப்பட்டு மறுபிறவி எடுத்தார். அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kailash Satyarthi and Pakistani girl Malal Yousafzai have received the nobel peace prize at a ceremony in Oslo today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X