For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென மைதானத்திற்குள் நுழைந்த கங்காருகள்.. ஷாக்கான கால்பந்து வீரர்கள்.. அப்புறம் நடந்தது அல்டிமேட்

ஆஸ்திரேலியாவில் இரண்டு கங்காருக்கள் மைதானத்திற்குள் நுழைந்து கால்பந்து விளையாடின.

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் மைதானத்திற்குள் நுழைந்து இரண்டு கங்காருக்கள் கால்பந்து விளையாடிய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. அதேபோல் ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. தாவித்தாவி ஓடுவதில் கங்காருக்களை அடித்துக்கொள்ள வேறு விலங்கே இல்லை. ஒரே தாண்டுதலில் 13 மீட்டர் வரை தாண்டக் கூடியவை அவை.

Kangaroos entered football ground in Australia

சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இரு அணிகள் வீரர்கள் மிகக் கடுமையாக மோதி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மைதானத்திற்கு இரண்டு கங்காருக்கள் தாவிக்குதித்து நுழைந்தன. இதனால் கால்பந்து வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்டமும் தடைப்பட்டது. அந்த கங்காருக்களை மைதானித்தில் இருந்து விரட்ட வீரர்கள் முயன்றனர்.

கோவையில் தங்க, வெள்ளி மாஸ்க்... அசத்திய பொற்கொல்லர்...குவியும் ஆர்டர்கள்!!கோவையில் தங்க, வெள்ளி மாஸ்க்... அசத்திய பொற்கொல்லர்...குவியும் ஆர்டர்கள்!!

ஆனால் அவை தாவிக்குதித்து மைதானத்திற்கு நடுவே சென்றுவிட்டன. சிறிது நேரம் அமைதியாக இருந்த கங்காருக்கள், கால்பந்து விளையாடுவது போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தன.

அங்கிருந்த வீரர்களும் அந்த கங்காருக்களுடன் இணைந்து ஜாலியாக விளையாட தொடங்கிவிட்டனர். இதனால் பார்வையாளர்கள் குஷியாகி கத்த ஆரம்பித்தனர். சிறிது நேரம் கழித்து அந்த கங்காருக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டுவிட்டன. ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த இந்த ருசிகர சம்பவம் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

English summary
A video of a football match getting disrupted by a pair of kangaroos has gone viral on the social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X