For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரா?: பாதுகாப்பாக இருக்க முதலில் இதை படிங்க

By Siva
Google Oneindia Tamil News

கன்சாஸ்: கன்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள ஒலாதே பகுதியில் இந்திய என்ஜினியர் சீனிவாச குச்சிபோதலா சுட்டுக் கொல்லப்பட்டார். இனவாத பிரச்சனையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Kansas killing: Guidelines for Indians to stay safe in US

இதையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது ஆகியவை குறித்து சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் முக்கியமான ஒன்று பொது இடங்களில் தாய் மொழியில் பேசக் கூடாது என்பது.

தெலுங்கானா அமெரிக்க தெலுங்கு அசோசியேஷனின் பொதுச் செயலாளர் விக்ரம் ஜங்கம் வெளியிட்டுள்ள பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதாவது,

  • பொது இடங்களில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
  • யாராவது உங்களை வம்புக்கு இழுத்தால் சண்டை போடாமல் அங்கிருந்து சென்றுவிடவும்.
  • நீங்கள் தாய் மொழியில் பேசினால் அதை புரியாதவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடும்.
  • பொது இடங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசவும்.
  • ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம் இல்லை என்றால் தனியாக செல்ல வேண்டாம்.
  • நெருக்கடி நேரத்தில் 911 எண்ணுக்கு போன் செய்யவும்.
English summary
The killing of Indian engineer Srinivasa Kuchibhotla in an apparent case of hate crime in the United States of America has prompted a list of do and dont's. There are several suggestions that are being circulated on the social media following the incident and the main one being, "avoid speaking in your mother tongue in public."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X