For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நகரையே தூக்கிப்போட்ட பூகம்பம்.. 80 செ.மீ உயரம் அதிகரித்த நேபாள தலைநகர் காத்மாண்டு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

காத்மாண்டு: பூகம்பத்தை தொடர்ந்து நேபாள தலைநகர் காத்மாண்டு, 80 செ.மீ அளவுக்கு உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் புராதன சின்னங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 7,652 பேர் பலியாகினர். 16,390 பேர் காயம் அடைந்தனர்.

Kathmandu's altitude elevated by 80 cm after quake

இந்த நிலையில் மீட்பு பணி முடிந்து 4 நாட்களுக்கு பிறகு நேபாள சர்வே துறை சேத விவரங்கள் குறித்த ஆய்வு நடந்தியது. அதில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 234 வீடுகள் முற்றிலும் இடிந்து தரை மட்டமாயின. 2 ஆயிரத்து 37 ஆயிரத்து 68 வீடுகள் பாதி அளவில் சேதமடைந்துள்ளன. பூகம்பம் பாதித்த பகுதியில் 50 சதவீத வீடுகள் மட்டுமே குடியிருக்க தக்க நிலையில் உள்ளன. 20.25 சதவீத வீடுகள் குடியிருக்க முடியாத அளவில் சிதைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் பூகம்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட காத்மாண்டு பள்ளத்தாக்கு தற்போது முன்பை விட 80 செ.மீட்டர் அளவு உயர்ந்துள்ளது. பூகம்பத்துக்கு முன்பு இப்பள்ளத்தாக்கு கடல் மட்டத்தில் இருந்து 1,338 மீட்டர் உயரத்தில் இருந்தது. தற்போது அது 1338.8 மீட்டர் உள்ளது. இந்த தகவலை நேபாள சர்வே துறை இயக்குனர் மதுசூதன் அட்கிகரி தெரிவித்துள்ளார்.

பூமிதட்டில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு இந்த நில உயர்வுக்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றநர்.

English summary
The altitude of the Kathmandu Valley has risen by 80 cms after the devastating earthquake struck Nepal last month, the Survey Department said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X