For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்

Google Oneindia Tamil News

நூர் சுல்தான்: கொரோனாவை விட கொடிய நோய் .கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது என .கஜகஸ்தானில் உள்ள சீன தூதரகம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகானில் பரவ தொடகிய கொரோனா வைரஸ், ஜனவரியில் உலக நாடுகளுக்கு பரவியது. அடுத்த 100 நாளில் 10 லட்சம் பேரை பாதித்த கொரோனா அதற்கு அடுத்த 100 நாளில ஒரு கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.

5லட்சத்திற்கும் அதிகமான மக்கள்இதுவரை உயிரிழந்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் கொரோனாவால் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மடிந்து வருகிறார்கள்.

அடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்அடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்

தீவிரமான முயற்சி

தீவிரமான முயற்சி

இந்த தொற்று நோய் பரவ தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்துகள் கண்டுபிடிக்க அமெரிக்கா, இங்கிலாந்து,இந்தியா, ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கவும் தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது.

கொரோனாவை விட கொடியது

கொரோனாவை விட கொடியது

இந்நிலையில் மத்திய ஆசிய நாடானா கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக, அந்நாட்டில் வாழும் சீன குடிமக்களை சீனா எச்சரித்துள்ளது. கஜகஸ்தானில் உள்ள சீனத் தூதரகம். பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் (நிமோனியா) இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் 628 பேர் இறந்திருப்பதாக கூறியுள்ளது. இந்த நோயின் இறப்பு விகிதம் கொரோனாவை விட அதிகமாக உள்ளது என்றும கஜகஸ்தானின் சுகாதாரத் துறை "இந்த நிமோனியாவின் வைரஸ்" குறித்து ஆய்வு செய்வதகாவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு அதிகம்

உயிரிழப்பு அதிகம்

கஜகஸ்தானின் சுகாதார அமைச்சர், நிமோனியாவால் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என்று தெரிவித்தார். மார்ச் 16 அன்று, கொரோனா பரவுவதை தடுக்க கஜகஸ்தான் அவசரகால நிலையை அறிவித்தது. மே 11 அன்று லாக்டவுன் நீக்கப்பட்ட நிலையில் நிமோனியா தொற்றுகள் அதிகரித்துள்ளது. இந்த தொற்று அதிகரித்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

300 பேருக்கு பாதிப்பு

300 பேருக்கு பாதிப்பு

தலைநகர் நூர் சுல்தானில் நாள் ஒன்றுக்கு 200 பேர் நிமோனியால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் 300 பேருக்கு இந்த பெயரிடப்படாத நிமோனியா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஏற்கெனவே கஜகஸ்தானில் கொரோனாவால் 53,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பெயரிடப்படாத நிமோனியாவும் பரவுவது அந்நாட்டு அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    கொரோனாவை முதலில் கண்டுபிடித்த டாக்டர்... வெளியான திக் பின்னணி
    கஜகஸ்தான் நிராகரிப்பு

    கஜகஸ்தான் நிராகரிப்பு

    இதனிடையே சீன தூதரகம் அதன் வி சாட் இயங்குதளத்தில் இந்த நிமோனியா குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், சினா வெய்போவில் உள்ள மக்கள் "அறியப்படாத நிமோனியா" பற்றி சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதித்து வருகிறார்கள். 2020 ஆம் ஆண்டில் பூமிக்கு என்ன ஆச்சு? முதலில், COVID-19 மற்றும் இப்போது மற்றொரு நிமோனியா? இந்த ஆண்டில் நாம் விரும்புவது எல்லாம் பாதுகாப்பாக வாழ வேண்டும்" என்பது தான் என ஒருவர் எழுதியுள்ளார். இதனிடையே சீனாவின் இந்த கருத்தை கஜகஸ்தான் நிராகரித்துள்ளது.

    English summary
    The Chinese Embassy in Kazakhstan has warned that 'unknown pneumonia' with higher fatality rate than COVID-19: but Kazakhstan rejects Chinese embassy’s claims
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X