For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டைம் பத்திரிக்கையின் பிரபலம் யார்?-மோடியை விட அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அதிக ஓட்டு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பாரதியஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை விட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலைத்தான் அதிகம் பேருக்கு தெரிந்திருக்கிறதாம்.டைம் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

உலகின் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை டைம் இதழ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. 2014-ம் ஆண்டுக்கான இப்பட்டியல் தரவரிசைப்படுத்தப் படாமல் பொதுவாக 100 பேரை மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இதில், நரேந்திர மோடி, அர்விந்த் கெஜ்ரிவால், கோவையைச் சேர்ந்த முருகானந்தம், எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகிய நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால்

டைம் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் பற்றி எத்தனைபேருக்குத் தெரியும் என்று கேட்கப்பட்டதற்கு 3,168,308 பேர் பதிலளித்துள்ளனர். அதில் 71.5 சதவிகிதம் பேர் தெரியும் என்றும் 28.5 சதவிகிதம் பேர் தெரியாது என்றும் பதில் கூறியுள்ளனர்.

மோடியைத் தெரியுமா?

மோடியைத் தெரியுமா?

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு பிரபலமான பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பற்றி 5,075,588 பேர் பதில் கூறியுள்ளனர். இதில் 49.7 சதவிகிதம் பேர் தெரியும் என்றும், 50.3 சதவிகிதம் பேர் தெரியாது என்றும் பதில் கூறியுள்ளனர்.

ராகுல்காந்தியை தெரியுமா?

ராகுல்காந்தியை தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பற்றிய கேள்விக்கு 96,070 பதில் கூறியுள்ளனர். இந்த பட்டியலில் 40 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது ராகுல்காந்திக்கு.

அதிபர் ஒபாமா

அதிபர் ஒபாமா

ஆண்டுதோறும் டைம் இதழ் நூறு பேர் கொண்ட பட்டியலை வெளியிடுகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

எட்வர்ட் ஸ்னோடென்

எட்வர்ட் ஸ்னோடென்

இவர்களுடன் போப் பிரான்சிஸ், ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புடின், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்ஸாய், அமெரிக்க புலனாய்வுத் துறையின் அத்து மீறல்களை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்த எட்வர்டு ஸ்னோடென், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aam Aadmi Party founder Arvind Kejriwal is leading the Time magazine’s readers poll of 100 Most Influential People in the world with the highest percentage of ‘yes’ votes, pipping BJP’s prime ministerial candidate Narendra Modi and American singer Katy Perry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X