For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கென்யா: நபிகள் நாயகத்தின் தாயார் பெயர் தெரியாததால் இந்தியரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்

By Siva
Google Oneindia Tamil News

நைரோபி: முகம்மது நபியின் தாயின் பெயர் தெரியாததால் இந்தியரை கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மாலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக சுட்டதில் 2 இந்தியர்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.

Kenya terror attack: Indian killed as he couldn’t name Prophet Mohammad’s mother

இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த கிறிஸ்தவரான ஜோஷ்வா ஹகீம் கூறுகையில்,

ஒரு இந்தியரை தீவிரவாதிகள் அழைத்தனர். அவரிடம் முகம்மது நபியின் தாயாரின் பெயர் என்ன என்று கேட்டனர். அவருக்கு பதில் தெரியாததால் அவரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் ஸ்வஹீலி மொழியில் பேசினர். அவர்கள் முஸ்லிம்களை அடையாளம் கண்டு வெளியேறுமாறு கூறினர். என்னை அழைத்தபோது என் ஐ.டி. கார்டில் இருந்த ஜோஷ்வா என்ற முதல் பெயரை விரலால் மறைத்துக் கொண்டு ஹகீமை மட்டும் காட்டினேன். அதனால் உயிர் பிழைத்தேன் என்றார்.

ஏதோ கோழிக்கு இறைபோடுவது போன்று தீவிரவாதிகள் மக்களை நோக்கி சுட்டனர் என்று உயிர் பிழைத்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தெரிவித்தார்.

English summary
Nairobi Westgate mall attackers shot an Indian as he couldn't name Prophet Mohammad's mother, said a survivor named Joshua Hakim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X