For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கென்யாவில் சர்ச்சுக்கு பெண்கள் உள்ளாடை அணிந்து வர தடை விதித்த பாதிரியார்

By Siva
Google Oneindia Tamil News

Kenyan pastor bans women from wearing panties to church
நைரோபி: பெண்கள் தேவாலயத்திற்கு வரும்போது உள்ளாடை அணியாமல் வருமாறு கென்ய பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள லார்ட்ஸ் ப்ரொபெல்லர் ரிடம்ப்ஷன் தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் ஜோஹி.

அவர் தேவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்,

பெண்கள் உள்ளாடை அணிவது கிறிஸ்து அவர்களின் வாழ்வில் நுழைவதை தடுக்கிறது. அதனால் பெண்கள் தேவாலயத்திற்கு வருகையில் உள்ளாடையின்றி ஃப்ரீயாக வாருங்கள். தேவாலயத்திற்கு வரும்போது உடலும், உள்ளமும் ஃப்ரீயாக இருக்க வேண்டும். அதற்கு உள்ளாடை தடையாக உள்ளது.

என் பேச்சையும் மீறி யாராவது ரகசியமாக உள்ளாடை அணிந்து வந்தால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். தாய்மார்களே நீங்கள் தேவாலயத்திற்கு வரும்போது உள்ளாடையின்றி வரவும். உங்களின் மகள்களும் உள்ளாடை அணியாமல் வருகிறார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும் என்றார்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்கு வந்த பெண்களில் பெரும்பாலானோர் உள்ளாடை அணியாமல் வந்துள்ளனர்.

English summary
A Kenyan pastor has banned women from wearing innergarments to church. He believes that innerwear prevent Christ from entering women's lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X