For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோழிக்குப் பதில் எலியைக் கொடுத்து... கலிபோர்னியா டிக்சனை கதறடித்த கே.எப்.சி.!

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டிவோரிஸ் டிக்சன் என்பவர் அங்குள்ள கேஎப்சி உணவகத்துக்குப் போய் பேயடித்தது போன்ற நிலைக்கு ஆளாகி திரும்பியுள்ளார்.

மேட்டர் ஒன்றும் இல்லை. சிக்கன் பிரை வாங்கிய அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பிரையைப் பார்த்து பீதியாகி விட்டார். காரணம், எலி பிரையைக் கொடுத்து அவரை அதிர வைத்து விட்டனர்.

KFC just served a rat in place of chicken

மேகியைப் பார்த்து அலறினால் அது இந்தியா என்று சொல்லலாம். அதேபோல கே.எப்.சியை வைத்து அமெரிக்காவில் பல கூத்துக்கள் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன. ஆனாலும் இன்று வரை அங்கு தடையெல்லாம் விதிக்கவில்லை.

இந்த நிலையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த டிக்சன் என்பவர் ஒரு கேஎப்சி உணவகத்துக்குப் போனார். சிக்கன் விங்ஸுக்கு ஆர்டர் கொடுத்தார். அதுவும் வந்து சேர்ந்தது. வாங்கிப் பார்த்தவர் ஆடிப் போய் விட்டார். பெரிய எலி ஒன்று படுத்திருப்பதைப் போலவே இருந்தது சிக்கன்.

நாம் கேட்டது சிக்கன்தானே, எலியைக் கொடுத்து விட்டார்களே என்று கடுப்பாகிப் போன அவர் என்ன என்று விசாரித்துள்ளார். அப்போதுதான் விஷயம் தெரிந்தது. உண்மையிலேயே அது எலிதானாம். சிக்கன் பிரைக்குப் பதில் எலி பிரையைக் கொடுத்து விட்டனர். இதற்காக டிக்சனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து பேஸ்புக்கிலும் போட்டு மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் டிக்சன். இது இப்போது வைரல் ஆகியுள்ளது.

பலரும் பேசாமல் கென்டகி பிரைடு சிக்கன் (கே.எப்.சி) என்ற பெயரை கென்டகி பிரைட் ரேட் (கே.எப்.ஆர்) என்று மாற்றி விடலாம் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

English summary
Just when we thought a ban on Maggi was the only bad news one would here in a long time, here comes another one- a man in America found rat in what he thought to be KFC's chicken wings. Yes, you read that right! Devorise Dixon, a California based professional got the shock of his life when he realised that his fried chicken looked like a creature with a tail and a look at the picture is enough to convince you that it is indeed a rat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X