For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது எலி இல்லை பாஸ், நல்லா உத்துப் பாருங்க.. சிக்கன்தான்..!

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சலெஸ்: லாஸ் ஏஞ்செலஸில் எலிக் கறி போட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள கே.எப்.சி. உணவகம் தற்போது அது எலி பிரை அல்ல, சிக்கன்தான், பார்ப்பதற்கு எலி பிரை போல இருந்ததால் குழப்பமாகி விட்டது என விளக்கம் அளித்துள்ளது.

டேவோரிஸ் டிக்ஸன் என்ற இளைஞர் சில நாட்களுக்கு முன்பு இந்த உணவகத்திற்குச் சாப்பிட வந்தார். வந்தவர் சிக்கன் விங்ஸ் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு வந்த உணவைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அப்படியே ஒரு குட்டி பெருச்சாளி படுத்துக் கிடந்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அவருக்கு வந்த பிரை.

KFC Says 'Fried Rat' Is Just A Weird-Looking Chicken Tender

வெலவெலத்துப் போன அவர் இது என்ன என்று கேட்டபோது எலி பிரை என்று பதில் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காச் மூச் என்று கத்தி விட்டுக் கிளம்பி விட்டார் டிக்சன். மேலும் அந்த பிரையை போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் பேஸ்புக்கில் போட்டு விட்டார். அவ்வளவுதான் அது ஹிட்டாகி விட்டது, வைரல் ஆகி விட்டது. இதுவரை 1,21,000 முறை அது ஷேர் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது டிக்சன் பொய் சொல்கிறார், மக்களுக்குத் தவறான தகவல் தருகிறார் என்று கேஎப்சி விளக்கியுள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், அது சிக்கன்தான், எலி அல்ல. டிக்சன் தவறான தகவலை மக்களுக்குச் சொல்லி வருகிறார்.

கேஎப்சிக்கு எதிராக அவர் கொடுத்த புகார் மீதான விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவும் மறுத்து விட்டார். அவர் காட்டிய உணவுப் பொருளை எங்களது நிபுணர்கள் பார்க்கவும் அவர் அனுமதிக்கவில்லை. எனவே அவர் வேண்டும் என்றே இப்படிச் செய்து மக்கள் மத்தியில் எங்களது நிறுவனத்திற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக கருத வேண்டியுள்ளது.

எங்களுடன் பேசவும் அவர் மறுத்து விட்டார். வக்கீல் மூலமும் பேச மறுத்து விட்டார். பேஸ்புக் மூலமும் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

எங்களது சிக்கன் பிரையானது விதம் விதமான வடிவில் இருக்கும். அப்படித்தான் இப்படி ஒரு சிக்கன் பிரை போயுள்ளது. அது பார்ப்பதற்கு வேறு உருவில் இருந்ததால் அதை டிக்சன் பிரச்சினையாக்கியுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

டிக்சன் கூறியது சிக்கன்தான் என்பதை நிரூபிக்கும் புகைப்படம் ஒன்றையும் கேஎப்சியின் செய்தித் தொடர்பாளர் ரோட்ரிகோ கரோனல் ஹப்பிங்டன்போஸ்ட் இதழுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

English summary
A California man made waves on Facebook after posting a photo of an oddly shaped cutlet that he claims to have received in a three-piece meal from a Los Angeles KFC on Friday. As of Thursday afternoon, the image had been shared more than 121,000 times. But KFC says Dixon is misleading the public and that the object in question is just a piece of breaded chicken.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X