For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜமால் கொலை எதிரொலி.. முக்கிய சவுதி அதிகாரிகளின் விசா ரத்து.. அமெரிக்கா அதிரடி!

பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகளின் விசாவை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மரணத்தில் வெளியான திடுக் தகவல்-வீடியோ

    இஸ்தான்புல்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகளின் விசாவை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.

    சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா பதில் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து உள்ளது. அமெரிக்கா இதில் தீவிரமாக இன்னும் சில நாட்களில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.

    அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார்.

    டீ டீ டீ டிஷ்... தூச்சுக் குட்டி.. புஜ்ஜி குட்டி... குழந்தையுடன் கொஞ்சி மகிழும் விஜய்- வைரல் வீடியோ டீ டீ டீ டிஷ்... தூச்சுக் குட்டி.. புஜ்ஜி குட்டி... குழந்தையுடன் கொஞ்சி மகிழும் விஜய்- வைரல் வீடியோ

    கொன்றனர்

    கொன்றனர்

    இவர் அந்த தூதரகத்திலேயே வைத்து சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவர் 18 பேர் கொண்ட படையால் கொல்லப்பட்டார். கடந்த சில வருடங்களாக இவர் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். இதற்காகவே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொல்லப்பட்டதை சவுதி அரசும் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    இதனால் அமெரிக்காவில் சவுதிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. அமெரிக்க அரசாங்கம் எந்த அளவிற்கு இந்த கொலையை கண்டித்ததோ அதே அளவிற்கு அமெரிக்க மீடியாக்களும் இது குறித்து எழுதியது. அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஒருவரை அழைத்து இப்படி கொலை செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று எல்லோரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    சிலரை கண்டுபிடித்தனர்

    சிலரை கண்டுபிடித்தனர்

    இந்த கொலையில் மொத்தம் 18 பேர் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் சிலரை அமெரிக்க அரசாங்கம் அடையாளம் கண்டு இருக்கிறது. இவர்கள் மீது சவுதி அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனாலும் தனியாக அமெரிக்காவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    விசா ரத்து

    விசா ரத்து

    இதில் அடையாளம் காணப்பட்ட நபர்கள் பெயர்கள் வெளியாகவில்லை. ஆனால் அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5 பேரின் அமெரிக்க விசா முதற்கட்டமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இனி அமெரிக்காவிற்குள் நுழையவே முடியாது என்று கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    Khashoggi killing: America revokes visas to some of Saudi officials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X