For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொட்டி படுக்கை போல் டாய்லெட்டையும் கையுடன் கொண்டு வந்த குழந்தைசாமி

சிங்கப்பூருக்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கழிப்பறையை கொண்டு வந்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    வடகொரியாவின் மீதான தடை நீடிக்கும் என்று ட்ரம்ப் அறிவிப்பு-

    சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கென சொந்த டாய்லெட்டையும் கொண்டு வந்தனர்.

    சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் இடையேயான முதல் முறையாக பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிபர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    Kim Jong Un brings his own toilet

    இந்த சந்திப்புக்காக வடகொரியாவில் இருந்து அதிபர் கிம்மின் பாதுகாப்பு வீரர்களும் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர். அப்போது வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் கிம்முக்காக அவரது சொந்த கழிப்பறையை பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.

    அதுமட்டுமல்ல கிம்முக்கான சிறப்பு உணவுகள், புல்லட் ப்ரூப் கார் ஆகியவற்றையும் கொண்டு வந்தனர். ஒரு வகை அச்சத்தின் காரணமாக பியாங்கியாங்- ஷாங்காய்- சிங்கப்பூர் செல்ல 6 மணி நேர பயண நேரத்தை விட்டுவிட்டு பெய்ஜிங் வழியாக 10 மணி நேரம் பயணம் செய்தார் கிம்.

    எங்கு சென்றாலும் டாய்லெட்டை கொண்டு செல்வது ஒன்றும் இது புதிதல்ல. தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்திக்க கடந்த ஏப்ரல் மாதம் சென்றபோதும் போர்டபிள் டாய்லெட் கொண்டு செல்லப்பட்டது.

    அந்த சந்திப்பின்போது கிம் சொந்தமாக பேனா, பென்சில்களையும் கொண்டு வந்தார். அது போல் கிம் எங்கு கைவைத்தாலும் அவரது ரேகைகள் பட்ட அந்த இடத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் துடைத்து விட்டனர். கைரேகையை கூட எங்கும் விட்டு வைக்க கூடாது என்பது கிம்மின் எண்ணம்.

    English summary
    North Korea President brings his own toilet with him to Singapore. He made talks with US president Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X