For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தம்" அடிக்கக் கூடாது என்று வலியுறுத்திய நிகழ்ச்சியை "குப்" விட்டபடி ரசித்த கிம்!

Google Oneindia Tamil News

பியாங்யாங்: புகைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் புகை விட்டபடி ரசித்தார்.

வட கொரிய சர்வாதிகாரி கிம், மக்களுக்குத்தான் விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் போட்டு வைத்து கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சாட்டையை சுழற்றுவார். ஆனால் அவர் எதையுமே மதிக்க மாட்டார். இந்த நிலையில் கிம் குறித்த ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

Kim Jong Un caught smoking during anti-smoking drive in North Korea

தலைநகரில் நடந்த புகைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கிம். ஆனால் அந்த நிகழ்ச்சியில் புகை பிடித்தபடி கலந்து கொண்டுள்ளார் கிம்.

கையில் சிகரெட்டும், அதிலிருந்து புகை வெளியேறுவதும் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இத்தனைக்கும் சிறார்கள் முகாம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அங்கேயே அவர் சிகரெட்டும் கையுமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளஆர்.

முன்னதாக தனது அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் வெளிநாட்டு சிகரெட் புகைக்கக் கூடாது என்று தடை போட்டுள்ளார் கிம். அது தேச துரோகம் என்றும், உள்ளூர் சிகரெட்டை மட்டுமே புகைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kim Jong Un, the Supreme leader of North Korea was caught smoking during an anti-smoking drive in North Korea, media reported. This has come as embarrassment for North Korea as its supreme leader failed to practice what his government is preaching. North Korea's state media published a photograph this week of Kim holding a cigarette in his hand -- with smoke permeating from the tip -- in the middle of a North Korea anti-smoking drive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X