For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஹைட்ரஜன் குண்டு' வெடிக்கத் தயார்: வட கொரிய அதிபரின் மிரட்டல்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: நாட்டின் இறையாண்மையை தக்கவைத்துக்கொள்ள 'ஹைட்ரஜன் குண்டுகள்' வெடிக்க தயார் நிலையில் இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசியதை அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அந்நாட்டில் அணுகுண்டுகளை சோதித்து வரும் வரலாற்று சிறப்பு மிக்க பயோங்க்சொன் ராணுவ தளத்திற்கு சென்று பார்வையிட்டார்.

 Kim jong Un claims North Korea has Hydrogen bomb

அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கிம் ஜோங் உன், வடகொரியா ஏற்கெனவே வலிமை வாய்ந்த அணு ஆயுத நாடாக உள்ளது. தனது இறையாண்மையை காத்துக்கொள்ள ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்கச செய்ய தயார் நிலையில் உள்ளது." எனக் கூறினார். அவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சு உலக நாடுகளிடையே பரபரப்பை எபடுத்தியது.

வட கொரியா 2006,2009, மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஏற்கெனவே 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. அவரது இந்தப் பேச்சு தென் கொரியா மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுக்கும் வடகொரியாவின் அணுசக்தி பலம் குறித்த சந்தேகத்தை எழுப்பியது.

இந்நிலையில் கிம் ஜோங் உன் அறிவிப்பை மறுத்துள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள், வடகொரியா அணுகுண்டு தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தில் மேலும் கவனம் செலுத்தி வருகிறது. 'ஹைட்ரஜன் குண்டுகள்' தயாரிப்பதர்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளனர்.

English summary
North Korea leader Kim jong Un says his country has developed Hydrogen bombs, but defense officials rejected his claim
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X