For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிரோடு இருக்கிறார் கிம் ஜாங்? 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு.. வெளியான போட்டோ

Google Oneindia Tamil News

பீஜிங்: சுமார் 20 நாட்களுக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்சம்சியில் பங்கேற்ற ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. இதன் மூலம், கிம் உயிரோடு இருக்கிறாரா என்ற சர்ச்சைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளன.

Recommended Video

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... திரும்ப வருகிறார் கிம் | Kim Jong Un makes public appearance

    வடகொரியாவில் சர்வாதிகார அதிபராக செயல்பட்டு வருபவர் கிம் ஜாங் உன் (36). உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாமல், இரும்புத் திரை நாடு போல வடகொரியா செயல்படுகிறது.

    வட கொரியாவின் இந்த செயல்களால், அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது உலகத்திற்கு தெரிவதில்லை. இப்படித்தான், அதிபர் கிம் நிலைமை என்ன என்பதும் தெரியாமல் இருந்தது.

    இதய சிகிச்சை

    இதய சிகிச்சை

    கிம் ஜாங் உன் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அதன் பின்னர் அதிபர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. குறிப்பாக நாட்டின் நிறுவன நாள் விழாவில் கூட அவர் பங்கேற்காததால், அவரது நிலைமை என்ன என உலக நாடுகளுக்கு சந்தேகம் எழுந்தது.

    சீனா மருத்துவர் குழு

    சீனா மருத்துவர் குழு

    வெளிநாட்டு ஊடகங்கள் அந்நாட்டில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் அங்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விட்டது. இதனிடையே சீனாவிலிருந்து ஒரு மருத்துவர் குழு வட கொரியா சென்றது இந்த சந்தேகங்களை இன்னும் அதிகரித்தது.

    பல தகவல்கள்

    பல தகவல்கள்

    இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட கிம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் அவர் உயிரிழந்து விட்டதாகவும், கொரோனாவால் பலியாகிவிட்டதாகவும், ஏவுகணை சோதனையில் சிக்கி கடுமையாக காயமடைந்து சிகிச்சை பெறுவதாகவும், பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

    உர தொழிற்சாலையில் ரிப்பன் வெட்டிய கிம்

    உர தொழிற்சாலையில் ரிப்பன் வெட்டிய கிம்

    இந்நிலையில், கிம் குறித்து கடந்த 20 நாட்களாக எந்த ஒரு தகவலும் கூறாமல் காத்தன வட கொரியா ஊடகங்கள். இந்த நிலையில் அவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வடகொரிய அரசு ஊடகம் KCNA ஏஜென்சி படத்தோடு செய்தி வெளியிட்டு தெரிவித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட உரத்தொழிற்சாலையை அதிபர் கிம் ஜாங் உன் நேற்று நேரில் வந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோவில் கிம் உற்சாகமாக உள்ளார்.

    மர்மங்கள்

    மர்மங்கள்

    இத்தனை நாட்கள் மவுனமாக இருந்துவிட்டு இப்போது இந்த புகைப்படத்தை வெளியிட காரணம் என்ன? இந்த போட்டோ இப்போது எடுக்கப்பட்டதா, பழைய போட்டோவா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே கிம் உடல்நிலை குறித்த மர்மம் இன்னும் தொடருகிறது.

    English summary
    Kim Jong-un has appeared in public for the first time in 20 days, North Korean state media says.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X