For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனிமேல் வட கொரியா போர் செய்ய தேவையே கிடையாது.. ஏன் தெரியுமா.. கிம் ஜாங் உன் அதிரடி பேச்சு

Google Oneindia Tamil News

பீஜிங்: இனி இந்த உலகத்தில் போர்களை வட கொரியா நடத்த தேவை எழாது என்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

1950-53 கொரியப் போரின் 67வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழா வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்றது. அப்போது அங்கே திரண்டிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில், கிம் ஜாங் உன் பேசினார்.

கிம் ஜாங் உன் உரை நிகழ்த்தியதாக, வீடியோ வெளியிட்டு வட கொரியாவின் அரசு செய்தி நிறுவனம், இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் உச்சகட்ட குழப்பம்...பாஜகவின் ஊதுகுழல் மாயாவதி...பிரியங்கா காந்தி விளாசல்!!ராஜஸ்தானில் உச்சகட்ட குழப்பம்...பாஜகவின் ஊதுகுழல் மாயாவதி...பிரியங்கா காந்தி விளாசல்!!

கொரிய போர்

கொரிய போர்

கொரிய போர் குறித்து, இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கொரிய தீபகற்பத்தை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியில் தற்போதைய வட கொரிய அதிபரின் தாத்தா கிம் இல் சுங் தெற்கே படையெடுத்து சென்றபோது இந்த போர் துவங்கியது என்பது உலக நாடுகள் சொல்லும் வரலாறு. ஆனால், அமெரிக்காவும், தென் கொரியாவும் வடபகுதியை நோக்கி முன்னேறியதால் போர் தொடங்கியது என்றும், கிம் இல் சுங்கின் தலைமையில், வட கொரியா வெற்றி பெற்றதாகவும், வட கொரியா தனது குடிமக்களுக்கு கற்பிக்கிறது.

அணு ஆயுதங்கள்

அணு ஆயுதங்கள்

இந்த நிலையில்தான், போரின் 67வது ஆண்டு விழாவில் கிம் ஜாங் உன் உரை உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. தனது உரையில் கிம் கூறுகையில்,
வட கொரியாவிடம் சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் உள்ளன. நமது பாதுகாப்புக்கு தேவையான அம்சங்கள் நம்மிடம் உள்ளன. எனவே, இந்த உலகத்தில், மேலும் போர் தேவைப்படாது. இவ்வாறு கிம் தனது பேச்சின்போது தெரிவித்தார்.

கைத் துப்பாக்கி

கைத் துப்பாக்கி

இதுதொடர்பான வீடியோவை வட கொரிய ஊடகம் வெளியிட்டுள்ளது. வடகொரியாவில் கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்று கிம் ஏற்கனவே கூறியிருந்தார். அதை உணர்த்தும் விதமாக 67வது ஆண்டு விழாவில் பங்கேற்றவர்கள் யாரும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. மேலும், ராணுவ தளபதிகள் அனைவருக்கும் கைத்துப்பாக்கியை கிம் பரிசாக அளித்தார்.

கம்பீரமான கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் உலா வந்தன. இந்த நிலையில், அவர் 67வது ஆண்டு கொரியப் போர் விழாவில் பங்கேற்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கம்பீரமாக அவர் காட்சியளிக்கிறார். 'குழந்தைச்சாமியை' பார்த்த மகிழ்ச்சியில் குஷியாக உள்ளனர் வட கொரிய மக்கள்.

English summary
North Korean leader Kim Jong Un said he believes his country will no longer need to fight wars because its nuclear arsenal guarantees its safety, according to North Korean state media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X