For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம்ஹூம்.. இதுக்கு மேல முடியாதுப்பா.. தங்கச்சி கையில் எல்லாத்தையும் தர போறாராம்.. "குழந்தைச்சாமி" கிம்

தங்கைக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க உள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோங்

Google Oneindia Tamil News

பயோங்யாங்: "போதும்ப்பா.. இனி நம்மால முடியாது.. இருக்கிற அதிகாரத்தை பிரித்து தங்கச்சிக்கு தந்துட வேண்டியதுதான்" என்று இறுதி முடிவுக்கு கிம் ஜோங் வந்தே விட்டாராம்.. அந்த அளவுக்கு வடகொரியாவின் பொருளாதாரம் கழுத்தை நெரித்து தள்ளி கொண்டிருக்கிறது!

Recommended Video

    வட கொரியாவில் உணவு பஞ்சம் | கிம் ஜாங் உன் திட்டம்

    ஒருசில மாதங்கள் முன்பிருந்தே வடகொரிய அதிபர் கிம்ஜோங் பற்றின தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.. குறிப்பாக ஹார்ட் ஆபரேஷன் நடந்ததில் இருந்தே அவரது உடல்நிலை பற்றின செய்திகளும் கவலை தரும்படிதான் வந்து கொண்டிருக்கின்றன.

    சமீபத்தில் எதிர்பாராத வகையில் பெருவெள்ளம் ஒன்று வடகொரியாவை சூழ்ந்தன.. கொரோனா தொற்று மொத்தமாக பீடித்து கொண்டது.. அதில் ரொம்ப அந்த நாட்டின் பொருளாதாரம் ஆடி போய்விட்டது.

    ரவுடிதனம் செய்தால் தப்ப முடியாது... கடும் நடவடிக்கை பாயும்... முதலமைச்சர் எச்சரிக்கைரவுடிதனம் செய்தால் தப்ப முடியாது... கடும் நடவடிக்கை பாயும்... முதலமைச்சர் எச்சரிக்கை

    நாய்க்கறி

    நாய்க்கறி

    இதையொட்டியே உணவு பஞ்சமும் அங்கு தற்போது எழுந்துள்ளது.. அதை எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் அதிபர் கிம் ஜோங் திணறி வருகிறார்.. "யார் வீட்டில் எல்லாம் நாய்களை வளர்க்கிறீங்களோ, அந்த நாய்களை கறிக்காக பயன்படுத்த அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள்" என்று சில நாட்களுக்கு முன்புகூட உத்தரவு ஒன்றை போட்டிருந்தார். அப்போதும் நிலைமை அங்கு சீராகவில்லை.

     அதிகாரம்

    அதிகாரம்

    அதனால் வேறு வழியில்லாமலும் நிலைமையை சமாளிக்கவும், தன் உடன்பிறந்த தங்கை கிம் யோ-விடம் கொஞ்சம் அதிகாரத்தை பிரித்து தரலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறாராம்.. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவருக்கு வேறு வழியும் தெரியாததால், தங்கையிடம் முதன்மையான பொறுப்பு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

     கிம் குடும்பம்

    கிம் குடும்பம்

    வடகொரியாவை பொறுத்தவரை, அது கிட்டத்தட்ட ராணுவ ஆட்சி போலதான்.. வெளி உலகத்தோடு எந்த தொடர்பும் இல்லாத ஒரு தனித்த பகுதியாகவே வட கொரியா திகழ்ந்து வருகிறது... கம்யூனிச நாடு என தன்னை பிரகடனப்படுத்தி கொள்ளும் இந்த வடகொரியாவில் தற்போதுவரை கிம் குடும்பத்தினர் மட்டும்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது... இது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது... தற்போதும் அந்த விமர்சனம் நிறையவே உள்ளது.

     ஆட்சி அதிகாரம்

    ஆட்சி அதிகாரம்

    சில மாதங்களுக்கு முன்பு, இவர் உடல்நிலை மோசமாகிவிடவும், செயல்பட முடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது அவர் இறப்பை சந்திக்க நேரிட்டாலோ அந்த நாட்டை யார் ஆட்சி செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, கிம் யோ தான் ஆட்சியில் அமருவார் என்று அறுதியிட்டு சொல்லப்பட்டது.. இதை உலக நாடுகளே அன்று உன்னிப்பாகவும் கவனித்தன.

    புத்திசாலி

    புத்திசாலி

    இதற்கு காரணம், கிம் ஜோங்குக்கு அவர் தங்கச்சி என்றால் ரொம்பவும் பிடிக்குமாம்.. ஒரு யூனிவர்சிட்டியில் கம்ப்யூட்டரில் மேல்படிப்பை முடித்துள்ளார் கிம் யோ.. வயசு 31 ஆகிறது.. கிட்டத்தட்ட கிம் ஜோங்கின் நிழல் என்றுகூட இவரை சொல்லலாம்... படுபுத்திசாலி.. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே தன்னுடைய தங்கைக்கு அரசியலில் முக்கிய பொறுப்புகள் வழங்கி வருவதால், அதை மிக சரியாகவே பயன்படுத்தி வருகிறார் கிம் யோ... அண்ணன் ஆஸ்பத்திரியில் இருந்தபோது வடகொரிய நிர்வாகத்தை சீரும் சிறப்புமாக நடத்தியது இவர்தான்.

     ஒருங்கிணைப்பு

    ஒருங்கிணைப்பு

    இருபது நாட்கள் கிம் எங்கு சென்றார், அவருக்கு என்ன ஆயிற்று, ஒருவேலை இறந்துவிட்டாரோ என்பது போன்ற வதந்திகளுக்கு துணிச்சலாகவும், தெளிவாகவும் பதில் சொல்லியதும் இவர்தான்.. அதுமட்டுமல்ல, சீனா - அமெரிக்க நாட்டு அதிபர்களுடன் கிம் ஜாங் உன் நடத்திய சந்திப்புகள் எல்லாவற்றையுமே தங்கை கிம் யோ ஜாங்க் தான் ஒருங்கிணைத்ததும் இவர்தான்.

    சாதனை

    சாதனை

    அந்த அளவுக்கு சக்தி திறமைசாலியான கிம் யோவிடம் நிர்வாக வசதிக்காக முக்கிய பொறுப்புகள் தற்போது செல்ல உள்ளதை அந்நாட்டு மக்கள் வரவேற்று வருகின்றனர். ஒருவேளை மொத்தமாகவே கிம் யோ வசம் வடகொரியா சென்றால், பாலின பேதங்களை தகர்த்து வடகொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை படைப்பார் கிம் யோ ஜோங்!

    English summary
    kim jong un share responsibilites his sister kim yo jong
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X