For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்பிள் "ஆப்" ஸ்டோரை தொங்க விட்ட கிம்மின் "கிமோஜி"...!

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சலெஸ்: ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தஷியானின் கிமோஜி அப்ளிகேஷனை பலரும் விழுந்தடித்துக் கொண்டு டவுன்லோட் செய்யப் போக, ஆப்பிள் ஆப் ஸ்டோரின் சர்வர் அடியாகி விட்டதாம்.

ஆனால் உண்மையான காரணம், அந்த ஆப்பில் காணப்பட்ட தொழில்நுட்பக் கோளாறாம். இதுதான் சர்வர் பாதிக்கப்பட காரணமாம். இதனால் தவறான ஆப்புக்காக ஆப்பிள் ஆப் ஸ்டோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கிம் கர்தஷியான்.

35 வயதான கிம், கிமோஜி என்ற பெயரில் ஒரு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். இது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் உலகம் முழுவதும் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆப்பில் உள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆப்பிள் ஆப் ஸ்டோரின் சர்வரில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.

இதுகுறித்து கிம் கூறுகையில் ஸாரி ஆப்பிள். உங்களது ஆப் ஸ்டோரை நான் தகர்த்து விட்டேன். இந்த கிமோஜியை டவுன்லோட் செய்ததால் ஆப் ஸ்டோரே பாதிக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

இந்த ஆப்புக்காக நாங்கள் கடுமையாக பணியாற்றினோம். மொத்தமாக டவுன்லோட் செய்யும்போது சில பிரச்சினைகள் வரும் என்று அறிந்திருந்தோம். இப்போது அதை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார் கிம்.

தற்போது கிமோஜி ஆப், ஆப்ஸ்டோரில் கிடைக்கவில்லை. நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் பிரச்சினைகள் சரியானதும் கிடைக்கும் என்று தனது ரசிகர்களுக்கு கிம் தெரிவித்துள்ளா்.

இந்த ஆப் அறிமுகமானதுமே கிம் ரசிகர்கள் ஆப் ஸ்டோரில் குவிந்து விட்டனர். அதாவது விநாடிக்கு 9000 பேர் வீதம் டவுன்லோட் செய்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த கிமோஜி ஆப்பில் கிட்டத்தட்ட 250 விதமான எமோடிக்கான்கள் உள்ளன.

English summary
Reality star Kim Kardashian's new emoji app, Kimoji has broken Apple's App Store and Kim has apologized for the same to the App store.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X