For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டொனால்ட் டிரம்ப்பை தொடர்ந்து சீன அதிபரை சந்திக்கும் வடகொரிய அதிபர் கிம்!

சீனா சென்று இருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பல உலக பிரச்சனைகள் குறித்து பேச உள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனா சென்று இருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பல உலக பிரச்சனைகள் குறித்து பேச உள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு இந்த மாதம் தலைவர்களை சந்திக்கும் மாதம் என்று கூட கூறலாம். இன்று காலை அவர் சீன அதிபரை சந்திக்க சீனாவிற்கு சென்றார். இரண்டு நாட்கள் அவர் சீனாவில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Kim meets Chinas President Xi Jinping after historical summit with Trump

கடந்த வாரம் வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த வருடம் நடந்த மிக சிறப்பான அமைதி உடன்படிக்கை, சந்திப்பு இதுதான் என்று கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சீன அதிபரை சந்திக்க கிம் சென்றுள்ளார்.

வடகொரியா அணு ஆயுதங்களை துறக்க முடிவெடுத்துள்ளது. இந்த பெரிய முடிவிற்கு பின்,கிம் மேற்கொள்ளும் . முதல் பயணம் இதுதான். உலக அரசியலில் சீனாவும் அமெரிக்காவும் எதிரெதிர் திசையில் இருக்கும் நிலையில் அமெரிக்க அதிபரை சந்தித்த ஒரே வாரத்தில், சீன அதிபரை கிம் சந்திக்கிறார்.

இதில் பல முக்கிய பிரச்சனைகள் குறித்தும், அணு ஆயுதம் குறித்தும், இனி வரும் நாட்களில் வடகொரியா பாதுகாப்பு குறித்தும் பேசப்பட உள்ளது.

English summary
Kim meets China's President Xi Jinping in China after historical summit with Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X