For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட.. கிம்மோட அப்பா இறந்த செய்தியே.. ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சுச்சு..அதுவும் அவங்க சொல்லித்தான்!

Google Oneindia Tamil News

பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை இறந்த செய்தியே 2 நாட்கள் கழித்துதான் வடகொரிய அரசு அறிவித்தது. எனவே கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்க உளவுத் துறை அறிய முயற்சித்தாலும் தகவல்கள் கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது.

Recommended Video

    சுற்றி நிற்கும் எதிரிகள்.. அண்ணனைப் போல அசகாயம் காட்டுவாரா கிம் தங்கை!

    கடந்த சில நாட்களாக, அதாவது ஏப்ரல் 15-ஆம் தேதி அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் கிம் கலந்து கொள்ளாதது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுக்கிறது. அவர் கடந்த 12-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக சியோல் இணையதளம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

    எனினும் இதுகுறித்து அந்நாட்டு தரப்பிலிருந்து கடுகளவு தகவல்கள் கூட கசியவில்லை. இவ்வளவு ஏன், இன்று சர்வதேச ஊடகங்களில் கிம்மின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றிருந்தன.

    கருத்துகள்

    கருத்துகள்

    ஆனால் வடகொரிய நாட்டு ஊடகங்களில் விளையாட்டு பொருட்கள், மல்பெரி இலைகளை பறிப்பது, பொருளாதாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளே அதிகம் இடம்பெற்றிருந்தன. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கிம் தற்போது ஒரு வில்லாவில் ஓய்வில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கிம்மின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த கருத்துகளை அறிய அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.

    அறுவை சிகிச்சை

    அறுவை சிகிச்சை

    எனினும் நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு இதே போல் பொது வெளியில் வருவதை கிம் நிறுத்திக் கொண்டார். அப்போதும் இதே போல் அவருக்கு கணுக்காலில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக வதந்திகள் கிளம்பின. அது போல் தற்போது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வதந்திகளை அவர்களது எதிரி நாடுகளில் ஒன்று கிளப்ப வாய்ப்பிருக்கிறது.

    2 நாட்கள்

    2 நாட்கள்

    என்னதான் கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்க உளவுத் துறை தெரிந்து கொள்ள நினைத்தாலும் வடகொரியாவிடம் இருந்து ஒரு தகவல் கூட கசியாது என்றே சொல்லப்படுகிறது. இத்தனை பெரிய உளவுத் துறையை கொண்டுள்ள அமெரிக்காவுக்கு கிம்மின் தந்தை 2011-ஆம் ஆண்டு இறந்தே தெரியாது. அவர்களாகவே அவர் இறந்து 2 நாட்கள் கழித்துதான் அறிவித்தார்கள்.

    கசிய ஒன்றும் இல்லை

    கசிய ஒன்றும் இல்லை

    எனவே கிம்மின் உடல்நிலை எப்படி இருக்கிறது, அவர் எங்கு ஓய்வெடுக்கிறார், சபதமிட்டபடி எப்போது அணு ஆயத சோதனை செய்யவுள்ளார் என்பது குறித்தெல்லாம் வடகொரிய அரசாங்கமே கூறினால் ஒழிய அங்கிருந்து கசியவதற்கு ஒன்றுமில்லை என்றே கருதப்படுகிறது.

    English summary
    Kim Un's father death news announced after 2 days. U.S. officials did not know of his father's death until the regime announced it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X