For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் "ஹொஹோய்" ராஜா!

Google Oneindia Tamil News

King of Ghana Island in German
கானா: ஸ்பை மூலம் பிற நாடுகளை உளவு பார்த்து நாட்டை ஆண்ட ராஜாக்கள் இன்று இல்லை. மாறிவரும் மாடர்ன் உலகில் அரசர் ஒருவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, "ஸ்கைப்" மூலமாக நாட்டை ஆண்டு வருகின்றார் என்றால் நம்ப முடிகின்றதா?

அந்தக் கால அரசர்கள், சிம்மாசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஹாயாக ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டே தீர்ப்பு சொல்கிறார் அரசர் கிங் பான்சா.

இவருடைய கெட்டப்பைப் பார்த்ததும் பழங்காலத்து அரசர் என்று நினைத்துவிடாதீர்கள். பக்கா மாடர்ன் ராஜா தான் இவர்.

மாடர்ன் ராஜ்ஜியம்:

இவர் ஒரு மார்டன் அரசர். நவீன யுகத்தில் வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொடர்பைக் கொண்டு ஜெர்மனியில் உட்கார்ந்தபடியே ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் உள்ள தன் ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.

ஸ்கைப் மூலம் தீர்ப்பு:

62 வயது கிங் பான்சா, ஜெர்மனியில் இருந்தபடியே கானாவில் உள்ள ஹொஹோய் பகுதியில் வசிக்கும் 2 லட்சம் மக்களின் பிரச்னைகளை "ஸ்கைப்" மூலம் தீர்த்துவைக்கிறார்.

ஜெர்மனியின் செந்தேன் மலரே:

சிறு வயதில் படிப்புக்காக ஜெர்மனி சென்ற பான்சா, ஒரு பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

தாத்தா இறந்ததால் ராஜா:

1987 இல் ஹொஹோய்க்கு ராஜாவாக இருந்த பான்சாவின் தாத்தா இறந்ததால், இவர் அரசர் ஆனார்.

ஸ்கைப்பில் தீர்ப்பு:

அதன்பின்னர் தன் ராஜ்ஜியத்தை ஸ்கைப்பில் இணைத்துக் கொண்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தீர்ப்புகள் சொல்லுவதும், உத்தரவுகளைப் பிறப்பிப்பதுமாக பிஸியாக உள்ளார்.

ஹாயாக விசிட்:

ஆனால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஹொ ஹோய்க்கு ஹாயாக சென்று வருகிறார் இந்த மாடர்ன் காலத்து மகாராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ghana Island king Pansa settled in German and investigate the cases by Skype.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X