For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாமஸ் காட்டுத் தீயை தொடர்ந்து க்ளமத்தான் தீ .. மீண்டும் பற்றி எரியும் தெற்கு கலிபோர்னியா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் தற்போது க்ளமத்தான் தீ காட்டு தீ ஏற்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தெற்கு பகுதியில் தற்போது க்ளமத்தான் தீ காட்டு தீ ஏற்பட்டுள்ளது.

தாமஸ் காட்டுத் தீயால் அந்த நகரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் தாமஸ் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காட்டுத் தீ உருவாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இதன் காரணமாக மொத்த கலிபோர்னியா நகரமே நாசமாகி இருக்கிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இந்த ஒரு வருடத்தில் மட்டும் கலிபோர்னியாவில் மொத்தம் தற்போது 15 காட்டுத் தீக்கள் உருவாகி உள்ளது. ஒரே வருடத்தில் கலிபோர்னியாவில் இவ்வளவு தீ ஏற்படுவது இதுவே முதல் முறை. அமெரிக்காவில் காட்டுத் தீ அதிகம் ஏற்படும் பகுதிகளில் கலிபோர்னியா முக்கிய இடத்தில் இருக்கிறது. தற்போது அங்கு தெற்கு பகுதியில் மீண்டும் காட்டு தீ ஏற்பட்டுள்ளது.

தாமஸ் தீ

தாமஸ் தீ

சில மாதங்களுக்கு முன் தாமஸ் காட்டுதீ ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் தொடங்கி கலிபோர்னியா வரை எல்லா பகுதியிலும் பல்வேறு இடங்களை இந்த தீ நாசம் செய்தது. கலிபோர்னியாவின் 2,65,000 ஏக்கர் நிலப்பரப்பை இந்த தீ நாசம் செய்தது. அமெரிக்க வரலாற்றில் இது பெரிய காட்டு தீயாகும்.

மீண்டும் பிரச்சனை

மீண்டும் பிரச்சனை

தற்போது அங்கு தெற்கு பகுதியில் க்ளமத்தான் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த க்ளமத்தான் காட்டுத் தீயை அணைப்பது மட்டும் மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை அடைவதற்குள் எப்படியாவது அணைக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. முக்கியமான் ஓரிகான் பகுதியின் சாலையை இந்த தீ அடைத்து இருக்கிறது.

நடந்தது என்ன

நடந்தது என்ன

கிட்டத்தட்ட சான் பிரான்சிஸ்கோ அளவை விட கலிபோர்னியாவில் அதிக இடம் இந்த தீயால் அழிந்துள்ளது. சுமார் 170 சதுர கிலோ மீட்டர் பகுதியை இது நாசம் செய்துள்ளது. இதனால் 400க்கும் அதிகமான வீடுகள் அப்படியே தீக்கு இரையாகி இருக்கிறது. 3,00,00 பேர் கலிபோர்னியா விட்டு வெளியேறிவிட்டனர்.ஆனால் தீ காரணமாக மரணம் குறித்த கணக்குகள் சரியாக தெரிவிக்கப்படவில்லை.

English summary
One of the most destructive fires in California's history was raging in a sprawling national forest and. Klamathon Fire torching California after Thomas fire. More than 3,00,000 people migrated from California..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X