For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம் Kofi Annan died

    ஜெனீவா: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

    தனது மனிதாபிமான பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அன்னான். அன்னானின் மரணம் குறித்து அறிவித்துள்ள அவரது அறக்கட்டளை சனிக்கிழமையன்று கோபி அன்னான் மரணமடைந்தார். அவர் சிறிது காலமாக உடல் நலமற்றிருந்தார் என்று தெரிவித்துள்ளது.

    Kofi Annan dies

    1997 முதல் 2006 வரை ஐ.நா. பொதுச் செயலாளராக இருந்தவர் கோபி அன்னான். இந்தப் பதவியை வகித்த முதல் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் அன்னான்தான்.

    அதன் பின்னர் சிரியாவுக்கான ஐ.நா. சிறப்புத் தூதராக கோபி அன்னான் பணியாற்றியுள்ளார். சிரியாவில் அமைதி திரும்பச் செய்வதற்காக கடுமையாக முயற்சி செய்தார்.

    அன்னானின் பதவிக்காலத்தின்போதுதான் 2003ல் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. சதாம் உசேன் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் 2006ல் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.

    English summary
    Former UN chief Kofi Annan died. He was 80. He was conferred with Nobel peace prize for his humanitarian works.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X