For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன்.. தன் குடும்பத்தினரை சந்தித்தார்!

பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன் யாதவ், பாகிஸ்தான் தூதரகத்தில் தன் குடும்பத்தினரை சந்தித்தார்!

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மரண தண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன்.. தன் குடும்பத்தினரை சந்தித்தார்!- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன் யாதவ் பெரும் போராட்டத்திற்கு பின் தன் குடும்பத்தினரை சந்தித்தார். இந்த சந்திப்பு பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்றது.

    இதற்காக இந்திய தூதரகம் பல நாட்களாக பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதில் இந்திய அரசின் கோரிக்கை முழுவதும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் அவர் தனது குடும்பத்தை மட்டுமாவது பார்க்க அனுமதித்தலில் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.

    இந்த சந்திப்பிற்காக மிகவும் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    குல்பூஷன் யாதவ் தண்டனை

    குல்பூஷன் யாதவ் தண்டனை

    இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் இருந்த போது உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது.

    இந்தியாவின் கோரிக்கை

    இந்தியாவின் கோரிக்கை

    அவரை விடுதலை செய்யும்படி கடந்த பல மாதங்களாக இந்தியா கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவின் எந்த கோரிக்கைக்கும் பதில் அளிக்கவில்லை. மேலும் நாடாளுமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இதுகுறித்து நிறைய விவாதங்கள் நடந்தது. ஆனாலும் அவருக்கு தண்டனை குறைப்போ, விடுதலையோ இன்னும் வழங்கப்படவில்லை.

    குடும்பத்தினர்

    கடைசியாக குல்பூஷன் யாதவ் அவரது குடும்பத்தை பார்ப்பதற்காவது அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்தியா
    கோரிக்கை வைத்து இருந்தது. மேலும் இந்திய தூதரகத்தில் இந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. ஆனால் சந்திப்பு பாகிஸ்தான் தூதரகத்தில் நடத்தப்படும் என்று கூறியது

    சந்திப்பு முடிந்தது

    தற்போது குல்பூஷன் யாதவ் தனது குடும்பத்தை சந்தித்து முடித்து இருக்கிறார். குல்பூஷன் யாதவுடன் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இருந்தனர். மேலும் குல்பூஷன் குடும்பத்துடன் இந்திய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் சென்று இருந்தார். இவர்கள் இருந்த கட்டிடத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பில் இருந்தனர்.

    English summary
    Pakistan claimed Jadhav alias Hussein Mubarak Patel was arrested from its restive Balochistan province on March 3 in 2016 after he reportedly entered from Iran. India, however, maintains that Jadhav was kidnapped from Iran where he had business interests after retiring from the Indian Navy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X