For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புது சட்டத்தால் மாறிய தலைவிதி.. குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம் இந்தியர்கள்

Google Oneindia Tamil News

குவைத்: குவைத்தில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டினர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அங்கு வாழும் இந்தியர்களில் சுமார் 8 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Recommended Video

    புதிய சட்டத்தால் சிக்கல்.. Kuwait நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் உலகின் எல்லா நாடுகளுமே பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதன் விளைவாக வேலை வாய்ப்புகள் குறைந்து நெருக்கடிநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கே வேலைகளில் முன்னுரிமை வழங்க முடிவெடுத்துள்ளன. வெளிநாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்கு வெளியேற்றவும் முடிவு செய்துள்ளன

    குவைத், பஹ்ரைன், ஓமன்.. வரிசையாக 7 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவிய கொரோனா.. சிக்கலில் தமிழர்கள்! குவைத், பஹ்ரைன், ஓமன்.. வரிசையாக 7 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவிய கொரோனா.. சிக்கலில் தமிழர்கள்!

     8 லட்சம் இந்தியர்கள்

    8 லட்சம் இந்தியர்கள்

    அந்த வரிசையில் குவைத் நாடும் இடம் பிடித்துள்ளது. பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், குவைத் அரசாங்கம் தங்கள் தேசத்தில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டினர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம், குவைத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட எட்டு லட்சம் இந்தியர்களின் தலைவிதி சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. அவர்கள் குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்தியர்கள் எண்ணிக்கை

    இந்தியர்கள் எண்ணிக்கை

    குவைத்தில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் படி, நாடாளுமன்றத்தின் சட்ட மற்றும் ஆட்சிமன்ற குழுவினர், இந்த வரைவு ஒதுக்கீட்டு மசோதாவை 'அரசியலமைப்பு' என்று தீர்மானித்துள்ளது. இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற குழு விரிவான திட்டத்தை உருவாக்க உள்ளது. இந்த மசோதாவின் படி குவைத்தில் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதத்தை இந்தியர்கள் தாண்டக்கூடாது.

    14.5லட்சம் இந்தியர்கள்

    14.5லட்சம் இந்தியர்கள்

    குவைத்தில் மொத்தம் 43 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் வெளிநாட்டினர். குவைத்தில் சுமார் 14.5 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். வெளிநாட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் எட்டு லட்சம் இந்தியர்கள் இப்போது குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

    வெளிநாட்டினர் எண்ணிக்கை

    வெளிநாட்டினர் எண்ணிக்கை

    கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் உள்ளூர் மக்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக குவைத்தில் உள்ள வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா சமீபத்தில் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க முன்மொழிந்துள்ளதாக அந்நாட்டு அரசின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    'Indian population shouldn't exceed 15%': eight lakh Indians living in Kuwait now hangs in the balance after Kuwait approved an expat quota bill
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X