For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில்.. ஏனோ வானிலை மாறுது.. எச்சரிக்கையாக இருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    குவைத்தில் வானிலை மாற்றம்-வீடியோ

    குவைத் சிட்டி: குவைத்தில் இந்த வார இறுதிக்குள் வானிலையில் பல மாற்றங்கள் இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் நீர் உள்வாங்க கூடும் என்றும், பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளில் வியாழக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை வானிலையில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்று குவைத் வானிலை ஆய்வாளர் அப்துல்ஜிஸ் அல் குராவி எச்சரித்துள்ளார்.

    Kuwait warns of severe weather conditions this weekend

    [சென்னை, புறநகரில் 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்.. வானிலை மையம் அறிவிப்பு ]

    கடல் மட்டத்தில் இருந்து ஏழு அடி உயரத்திற்கு ராட்சச அலைகள் எழக்கூடும் என்றும், 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும் எனவும் வெள்ளிக் கிழமை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் பெய்த பலத்த மழையில், சாலைகள், கட்டிடங்கள் என பெரும் சேதம் ஏற்பட்டு உள்கட்டமைப்புகள் மாறியது. நிலையற்ற வானிலை காரணமாக, நாட்டின் முக்கிய விமான நிலையங்களின் நடவடிக்கைகள் மந்தமானது. விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    இதனிடையே, குவைத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஜபீர் அல் முபாரக் அல் ஹமாத் அல் சபா தெரிவித்துள்ளார்.

    English summary
    Sea levels are expected to rise as strong wind, unstable weather across Kuwait.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X