For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டு மக்களுக்கு "அதில்" ஏன் ஆர்வமில்லை?... ஆராயச் சொன்ன ஸ்வீடன் அரசு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்டாக் ஹோம்: ஸ்வீடன் மக்களிடையே செக்ஸ் ஆர்வம் குறைந்து வருவதாக அந்நாட்டின் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட ஸ்வீடன் நாட்டின் சுகாதாரத்துறை,இது குறித்து மூன்று ஆண்டு கால ஆய்வு ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

விலைவாசி ஏறினாலோ... வறுமையில் வாடினாலே நாட்டு மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை ஆராய ஆய்வு நடத்துவது அரசின் முக்கிய வேலை ஆனால் நாட்டு மக்களிடையே செக்ஸ் உறவில் ஆர்வம் குறைந்து வருவதற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக ஸ்வீடன் மக்களிடையே செக்ஸ் ஆர்வம் குறைந்து வருவதாக அந்நாட்டின் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் நாட்டு மக்களுக்கு ஏதோனும் பிரச்சினையோ என்று ஆராயத் தொடங்கிவிட்டது அரசு.

ஆர்வம் குறைந்தது ஏன்?

ஆர்வம் குறைந்தது ஏன்?

நாட்டு மக்கள் ஏன் அதில் ஆர்வம் இன்றி இருக்கிறார்கள் என்று யோசித்த அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கேப்ரியேல் விக்ஸ்ட்ராம்,"ஸ்வீடன் நாட்டு மக்களிடையே செக்ஸ் ஆர்வம் குறைந்து வருவதற்கான காரணத்தை ஆராய வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் மற்றும் மற்ற உடல் நலக்குறைபாடுகள்தான் செக்ஸ் ஆர்வம் குறைய காரணம் என்றால், அது கண்டிப்பாக ஒரு அரசியல் பிரச்சனைதான் என தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர்.

தனிப்பட்ட பிரச்சினையா?

தனிப்பட்ட பிரச்சினையா?

செக்ஸ் என்பது தனிப்பட்ட மனிதர்களின் அந்தரங்கம் என கூறுவதை ஏற்க முடியாது.செக்ஸ் உறவு என்பது ஒரு மனிதனின் ஆரோக்கியம்,மன நலம் ஆகியவற்றோடு தொடர்புடையது.

வளர்ச்சி பாதிக்கும்

வளர்ச்சி பாதிக்கும்

செக்ஸ் ஆர்வம் குறைவதால்,ஒரு தனி நபர் ஒருவரின் பங்களிப்பு குறைவடையும் போது,நாட்டின் வளர்ச்சியிலும் தொய்வு ஏற்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விக்ஸ்ட்ராம் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஆண்டு கால ஆய்வு

மூன்று ஆண்டு கால ஆய்வு

ஸ்வீடன் மக்களிடையே செக்ஸ் ஆர்வம் குறைந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை கவனத்தில் எடுத்துக் கொண்ட ஸ்வீடன் நாட்டின் சுகாதாரத்துறை,இது குறித்து மூன்று ஆண்டு கால ஆய்வு ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

என்னென்ன ஆய்வு

என்னென்ன ஆய்வு

இந்த ஆய்வில் ஒருவர் தனது துணையை எப்படி சந்திக்கிறார்,சுய இன்பம்,உடலுறவின் எண்ணிக்கை,உடலுறவில் எப்படி ஈடுபடுகிறார்கள்,குழந்தை பிறப்பு போன்றவை கணக்கில் கொள்ளப்படும்.

புதிய ஆய்வு அவசியம்

புதிய ஆய்வு அவசியம்

1969ஆம் ஆண்டுதான் இது போன்ற ஒரு செக்ஸ் ஆய்வு ஸ்வீடன் நாட்டில் எடுக்கப்பட்டது.எனவே தற்போதைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய செக்ஸ் ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது ஸ்வீடன் சுகாதாரத்துறை

English summary
Sweden is launching the first major government sex study in two decades, after smaller surveys revealed that Swedes are enjoying less and less lovemaking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X