For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபத்தான இடம்.. பாதுகாப்பின்றி வந்த இந்திய கப்பல்.. ஏவுகணையோடு வந்து உதவிய சீனா..நடுக்கடலில் டிவிஸ்ட்

Google Oneindia Tamil News

சானா: இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் உரசல் நிலவி வரும் நிலையில், சோமாலியா கடல் பகுதியில் இரண்டு நாடுகளுக்கு இடையில் மிகவும் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

லடாக்கில் நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரண்டு நாடுகளும் எல்லையில் அதிக அளவில் படைகளை குவித்து வருகிறது. லடாக் பிரச்சனை 4 மாதமாக நீடித்து வருகிறது.

கல்வான் மோதலுக்கு பின் லடாக் பிரச்சனை தற்போது உச்ச நிலையில் உள்ளது. இனி லடாக்கில் என்ன நடக்கும், நிலைமை எப்படி மாறும் என்பது கணிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது.

சீனாவின் அடுத்த குறி.. அருணாச்சல் எல்லையில் படைகளை குவித்த பிஎல்ஏ.. இந்தியா ஹைஅலர்ட்!சீனாவின் அடுத்த குறி.. அருணாச்சல் எல்லையில் படைகளை குவித்த பிஎல்ஏ.. இந்தியா ஹைஅலர்ட்!

சோமாலியா கடல்

சோமாலியா கடல்

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் உரசல் நிலவி வரும் நிலையில், சோமாலியா கடல் பகுதியில் இரண்டு நாடுகளுக்கு இடையில் மிகவும் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உலகிலேயே சோமாலிய கடல் பகுதிதான் மிகவும் ஆபத்து வாய்ந்த கடல் பகுதியாக பார்க்கப்படுகிறது. Gulf of Aden என்று அழைக்கப்படும் ஏமன் மற்றும் சோமாலியா இடையே இருக்கும் கடல் பகுதி மிகவும் ஆபத்தானது ஆகும்.

கடல் கொள்ளையர்கள்

கடல் கொள்ளையர்கள்

இங்கு இருக்கும் கடல் கொள்ளையர்கள் உலகிலேயே மிகவும் மோசமான, ஆபத்தான கடல் கொள்ளையர்களாக பார்க்கப்படுகிறார்கள். இங்கு பாதுகாப்பு இன்றி கப்பல் பயணம் மேற்கொள்ள கூடாது. குறைந்தது 10 துப்பாக்கி ஏந்திய வீரர்களாவது இதன் வழியே செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த வழியே நேற்று அதிகாலை வந்த இந்திய கப்பல் ஒன்றுக்கு சீனா உதவி பாதுகாப்பு பணிகளை செய்துள்ளது.

கப்பல் வந்துள்ளது

கப்பல் வந்துள்ளது

இந்தியாவின் எம்டி தேஷ் கவுரவ் என்று எண்ணெய் கப்பல் இந்த கடல் பகுதி வழியாக வந்துள்ளது. எகிப்து கடல் பகுதியில் இருந்து இந்திய பெருங்கடல் நோக்கி இந்த கப்பல் வந்துள்ளது. ஆனால் இந்த கப்பலில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள யாரும் இல்லை. அதேபோல் பனாமா நாட்டை சேர்ந்த கெமிக்கல் டேங்கர் போன்ற இன்னும் சில கப்பல்களும் இதன் வழியே வந்துள்ளது.

பாதுகாப்பு ஆள் இல்லை

பாதுகாப்பு ஆள் இல்லை

இதில் எதிலும் பாதுகாப்பிற்கு ஆள் இல்லை. இதனால் இந்த கப்பல்கள் சார்பாக அருகே ரோந்து பணிகளை மேற்கொண்ட சீனாவின் கடற்படையிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளது. சீனாவின் கடல் படையின் 35வது படை பிரிவை சேர்ந்த போர் ரோந்து கப்பல் இதனால் இந்திய கப்பலுக்கு உதவி செய்ய வந்துள்ளது. ஞாயிறுக்கிழமை தொடங்கி நேற்று அதிகாலை வரை இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

ஏவுகணை

ஏவுகணை

சீனாவை சேர்ந்த தையூவான் என்ற போர் கப்பல் இந்திய கப்பலுக்கு பாதுகாப்பாக வந்துள்ளது. இந்த போர் கப்பல் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கப்பல் ஆகும். ஏவுகணைகளை திருப்பி தாக்கும் சக்தி கொண்ட போர் கப்பல் ஆகும். இந்திய கப்பலின் கோரிக்கையை ஏற்று இந்த சீன கப்பல் உதவிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்திய கப்பல் எல்லையில் மிகவும் பாதுகாப்பாக இந்திய எண்ணெய் கப்பல் நுழைந்துள்ளது.

Recommended Video

    சோமாலியா கடல் பகுதியில் நடந்த சுவாரசியமான சம்பவம்.. இந்திய கப்பலுக்கு உதவிய சீன கடற்படை
    நல்ல சம்பவம்

    நல்ல சம்பவம்

    இந்தியா சீனா இடையே எல்லையில் மோசமான மோதல் நிலவி வருகிறது. லடாக், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் என்று எல்லையின் அனைத்து பகுதிகளிலும் மோதல் நிலவி வருகிறது. எல்லையில் இப்படி பதற்றம் நிலவும் நிலையில் இந்திய கப்பல்களுக்கு சீனாவின் போர் கப்பல் பாதுகாப்பிற்கு வந்தது, மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Ladakh Standoff: Chinese navy helped Indian oil tankers to cross the Somalia water border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X