For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின் போது ‘ஹோவர்போர்டை’ப் பயன்படுத்திய பாதிரியார் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

மணிலா: பிலிப்பைன்ஸில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின்போது ஒரு பாதிரியார் "ஹோவர்போர்டைப்" பயன்படுத்தியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது செயலைக் கண்டித்த சான் பாப்லோ நகர டயோசிஸ், தற்போது அந்தப் பாதிரியாரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

கால்களில் கட்டிக் கொண்டு பறந்து செல்லும் எந்திரம் பொருத்தப்பட்ட பலகை போன்ற சாதனத்தையே ஹோவர்போர்டு என்று அழைக்கின்றனர்.

Laguna priest chided for using hoverboard in Mass

பிலிப்பைன்ஸின் லகுனா கடலோர மாகாணத்தில் உள்ள சான் பாப்லோ சர்ச்சில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின்போது காலில் ஹோவர்போர்டைக் கட்டிக் கொண்டு வந்தார் அந்தப் பாதிரியார். இது சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வந்திருந்தோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சான் பாப்லோ உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சான் பாப்லோ திருச்சபை வெளியிட்ட செய்தியில், "இது தவறானது, வழிபாட்டுத் தலத்திந் புனிதத் தன்மைக்கு குந்தகமானது. இதை மன்னிக்க முடியாது. கடவுளை அவமதிக்கும் செயல். சம்பந்தப்பட்ட பாதிரியார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு நடந்த பிரார்த்தனையின்போதுதான் இப்படி நடந்து கொண்டார் அந்த பாதிரியார். தற்போது தனது செலுக்கு அவர் மன்னிப்பும், வருத்தமும் கேட்டுள்ளார்.

This calls for a reparation!Instead, pray a rosary for this priest and attend a Traditional Latin Mass!

Posted by NOVUS ORDO Insider on Saturday, December 26, 2015

English summary
The Diocese of San Pablo on Tuesday, December 29, criticized one of its priests for using a hoverboard in a Christmas Eve Mass as seen in a video that has gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X